காவற்றொழிலும், அக்கினி
வேட்டலும், கலைகள் ஓதலும்,
அமுதுணவுண்டலும், களம்வேட்டலும் [ஆம் இப்பதினான்கும்] அரசர்க்குரிய
வென்றலும் அவரைப் புகழுஞ் செய்யுளின் வருக (என்றலுமாம்) எ - று.
இளைய
னாயினும் மணிமிடி கவித்தலின்
அரசு தொழி லல்லது பிறிதுதொழில் பெறான் |
என்பது பொய்கையார்
கலாவியல்.
(கு - ரை).
பூவை நிலை : பு. வெ. 192. பகலோன்கழல் போற்றல்
:
நின்றவெம் பருதி தோற்றந் தொழுதுதம் நியம முற்றி (வி.
பா. உ. 24) (7)
|
இதுவுமது
|
|
|
76.
|
விளங்கிய
நூல்கற்றல் வேத1நெறிநின் றறுசமயம்
உளங்கொண்டு போற்ற லமைச்ச ருரைகொளல் ஓர்ந்துகுடி
தளர்ந்தன தாங்கல் முறைமை கெடாது தனம்பெருக்கல்
அளந்து பெரும்படை 2சேர்த்த லரசர்க் கடுத்தனவே. |
(உரை
I). எ - ன், இதுவும் அரசர்க்குரிய தொழில் உணர்த்...............று.
(இ - ள்.)
வேதாகமநூல் கற்ற வேதியர் நெறியிலே நின்று, ஆறு
சமயத்தையும் பரிகரித்தல், அமைச்சர் உரைத்தவற்றை இகழாது கொள்ளல்,
தளர்ந்த குடிகளைத் தாங்கல், முறைமை வழுவாமற் பொருளீட்டல், காலம்
பார்த்து ஆனை தேர் குதிரை காலாள் கருவிகளைச் சேர்த்துக் கொள்ளுதல்
அரசரது இயல்பு எ - று.
விளங்கிய நூல் கற்றல் என்பது அறுபத்து நாலு கலைகளும்
அறிய
உணர்தல் என்றவாறு. இனி, அவரைப் பரவும் செய்யுள் இயம்பும் வகை
அறிந்து புணர்க்க.
(உரை - II).
எ - து, அரசர் ஒழுக்கமாவது அறமென்னும் அறிவு
பிரகாசிக்கப்பட்ட தன்ம சாத்திரங்களும், பொருளென்று சொல்லப்பட்ட
காவிய லட்சணமும் சோதிட சாத்திரம் முதலான பல சாத்திரமும்,
இன்பமென்று சொல்லப் பட்ட ஐம்பத்தாறு தேசத்துட்பட்ட புருஷலட்சணமும்
பெண்ணின் லட்சணமும் அவரவர் புணர்ச்சியும் ஊடலும் பிரிவும்
|