பக்கம் எண் :
 

70நவநீதப் பாட்டியல்

 
பாக்களின் சாதி
   
82. வேதியன் வேந்தன் வணிகன்வே ளாளன் எனமுறையே
ஓதுவர் வெண்பா வகவல் கலிவஞ்சி ஓதவற்றின்
பேதமு மவ்வகை யானே வருமென்ப பெய்தகட்டால்
தாதல ருங்குழற் றாமரைச் செய்ய சரிவளையே.

     (உரை I). எ - ன், பாக்களது சாதி உணர்த்..........று.

     (இ - ள்). வெண்பா வேதியன் ; அகவற்பா அரசன் ; கலி வணிகன் ;
வஞ்சி சூத்திரன் இவற்றினங்களும் இவ்வாறாம் எ - று.

     மாமூலர் இராசியும் நாளும் கிழமையும் மற்றும் எல்லாவற்றுக்கும்
சாதியும் அறைந்தார் ; அவற்றாற் பயனின்மையின் இவர் வேண்டிற்றிலரெனக்
கொள்க. (14)


 
செய்யுள் செய்வதோர் திறம்
   
83. +சாற்றுத் தலைவ னியற்பெய ரூர்க்குத் தகவெதுகை
தோற்றினு மப்பெயர் சொல்லுமப் பாகங்கள் துன்னுமச்சீர்
ஏற்ற வெழுத்து வரினு மியைந்த தியற்பெயர்க்கே
ஆற்றும் பொருத்த மனைத்தும் பொருந்துத லாஞ்சிறப்பே

     (உரை I). எ - ன், செய்யுள் செய்வதோர் திறம் உணர்த்.......று.

     (இ - ள்). பாட்டு்டைத் தலைமகன் இயற்பேர்க்கு ஆதல், அவன்
ஊர்ப்பேர்க்கு ஆதல் எதுகைத்தொடையோடு புணர்ப்பினும், இவை யிரண்டு
பெயர் வைக்கும்படி இவையிற்றின் கண் உளவாகிய இனவெழுத்து
அடிமுதற்கண் தோன்றி நிற்பினும் முன் சொல்லப்பட்ட பொருத்தம்
அனைத்தும் இயற்பெயர்க்குப் பொருந்துதல் சிறப்புஎ - று.

“திருவினா சிரியர் தூக்கிய லுரைத்தன
யாவையு மியற்பெயர்க் கல்லது
பொருத்தம் வேண்டார் புலமை யோரே”

என்பது கல்லாடம்.

     இவற்றால் தசாங்கத்திற்கென்று எய்துவித்தன எல்லாம் இயற்பெயர்க்குப்
பொருந்த வைப்பின் ஒழிந்தவையிற்றுக்கு வழுக்கினும் இழுக்கில்லை எ - று.