நூல்
2. சொல்லதிகாரம்
-------
1. வேற்றுமைப் படலம்
இப்படலத்தில், பெயர்ச்சொற்கள் வேற்றுமைகளை ஏற்கும் வகை கூறப்படுகின்றது.
இப்படலத்திற் பெயர்ச்சொற்களுக்குக் கூறப்பெற்றுள்ள இலக்கணத்தை நாம் முதலிலே தெரிந்துகொள்ள வேண்டும். இன்றேல் இப்படலத்திற் கூறப்படும் மற்றை இலக்கணங்கள் விளங்கா.
இப்படலத்திற் பெயர்ச் சொற்களுக்குக் கூறப்பட்ட இலக்கணங்களாவன; 'பெயர்ச்சொற்கள் முதல் வேற்றுமையை ஏற்ற பிறகே பொருளை உணர்த்தும்; முதல் வேற்றுமையை ஏற்காதபோது பொருளை உணர்த்தா; அந்த நிலையில் அவை பிரகிருதிகள் எனப்படும்,' என்பனவும், 'இரண்டு முதலிய வேற்றுமைகளுக்கு உருபிருத்தல் போல முதல் வேற்றுமைக்கும் உருபுகளுண்டு; அவை, சு, அர், ஆர், அர்கள், ஆர்கள், கள், மார் என்னும் ஏழுமாம்,' என்பனவுமாகும்.
அவற்றை இப்படலத்தில் "ஒருவ னொருத்தி" என வரும் இரண்டாம் பாட்டின் உரையில், 'ஒருவனைக் கருதின சொல்லும், ஒருத்தியைக் கருதின சொல்லும், பலரைக் கருதின சொல்லும், ஒன்றைக் கருதின சொல்லும், பலவைக் கருதின சொல்லும், ஒருவனைச் சிறப்பித்த சொல் லும், ஒருத்தியைச் சிறப்பித்த சொல்லும், ஒன்றைச் சிறப்பித்த சொல்லும் எனப் பெயர்ச் சொல்லெல்லாம் எட்டு வகைப்பட்ட பிரகிருதியாம், 'எனவும், ஐந்தாம் பாட்டின் உரையில்,' 'முன் சொல்லப்பட்ட எட்டுப் பிரகிருதிக்கும் பின்னாகச் சொல்லின் பொருண்மாத்திரத்தை விளக்குதற் பொருட்டாகச், சு, அர், ஆர், அர்கள், ஆர்கள், கள், மார் என்று சொல்லப்பட்ட எழுவாய் வேற்றுமைப் பிரத்தியம் ஏழும் வரும்; வருமிடத்து ஒருவனைக் கருதின சொல்லின் பின்னும், ஒருத்தியைக் கருதின சொல்லின் பின்னும், ஒன்றைக் கருதின சொல்லின் பின்னும், சு என்னும் பிரத்தியம் ஒன்றே வரும்; பலவைக் கருதின சொல்லின் பின்பு சு, கள் என்னும் பிரத்திய