பக்கம் எண் :
 
293

2. உபகாரகப் படலம்

முன் அமைந்த வேற்றுமைப் படலத்தின் முதற்பாட்டிலே 'பெயர் வேற்றுமை எழுவாய் முதல் எட்டாம்' எனவும், 'காரகம் கட்டார் கருத்தா முதல் ஆறுளவாம்' எனவும் கூறி வைத்து, அம்முறைப்படி முன்னே கூறிய எட்டு வேற்றுமையின் உருபுகளையும், அவற்றின் பொருள்களையும் அப்படலத்திற் கூறினார். இப்படலத்திலே பிற்கூறிய காரகங்கள் ஆறும் இவையாம் என்பதும், அவை இருபத்து மூன்றாதலும், இருபத்துமூன்று காரக பதங்களில் வேற்றுமைப் பிரத்தியங்கள் (வேற்றுமை உருபுகள்) மயங்கி வருதலுங் கூறுகின்றார்.

இருபத்து மூன்று காரக பதங்களின் வகை

கருத்தாக் காரகம்

 5

அவதிக் காரகம்

 2

கரணக் காரகம்

 2

கோளிக் காரகம்

 3

கருமக் காரகம்

 7

ஆதாரக் காரகம்

 4

----

23

----

இப்படலத்தில் காரகங்களுக்கு உதாரணங் கூறிய இரண்டாம் பாட்டின் உரையில் மேற்கோளாகக் காட்டப்பட்ட 'இந்திரன்' என்று தொடங்கும் பாட்டு, பிரயோக விவேகத்தின் பத்தாம் பாட்டாகக் காணப்படுகின்றது. ஆனால், மூன்றாம் அடியின் ஈற்று இரண்டு சீர்கள் 'வகுத்த வழிமுறையே' என்றிருக்கின்றன. பிரயோக விவேகம் பத்தாம் பாட்டின் மூன்றாம் அடியின் ஈற்று இரண்டு சீர்கள் 'பிறக்குமோர் வாக்கியத்துள்' என்றிருக்கின்றன. ஆதலின், இம்மேற்கோட் செய்யுள் வேறு பழைய நூலொன்றின் செய்யுளா, பிரயோக விவேகத்தின் செய்யுளா என்பன ஆய்தற்குரியன. பிரயோக விவேகச் செய்யுளாயின், இந்நூலின் உரையாசிரியர் காலத்திற்குப் பிரயோக விவேக நூலாசிரியரது காலம் பிற்பட்டதாகலின், அஃது அவ்வுரையாசிரியர் காட்டின மேற்கோட்செய்யுள் என்று கொள்ளுதற்குரியதாகாது. அம்