பக்கம் எண் :
 
300

இந்நூலிற் காணப்படும் வடமொழிப் பெயர்களுக்குத் தமிழ்ப் பெயர்கள் பிரயோக விவேகத்தினும், பிரயோக விவேகத்திற் காணப்படும் வடமொழிப் பெயர்களுக்குத் தமிழ்ப் பெயர்கள் இந்நூலினுங் காணப்படுகின்றன.

4-ஆம் பாட்டு
வெகுவிரீகி சமாசம்

வெகுவிரீகி சமாசமாவது, அன்மொழித் தொகை.

உரையாசிரியர் அன்மொழித்தொகை ஏழனுள் சகமுன்மொழித் தொகைக்கு இலக்கணம் கூறுமிடத்து, 'சகமுன்மொழித் தொகையாவது, வடமொழியில் முப்பத்திரண்டாம் வியஞ்சனத்தையும் முப்பத்து மூன்றாம் வியஞ்சனத்தையும் உடைய சொல் முன்னாகப் பெற்று, ஒரு மெய்ச்சொல் பின்னாகத் தொகுவதாம்' என்றார். அங்ஙனம் முன்னாக வரும் அம்மொழி 'ஸஹ' என்பது. இதில் முதல் எழுத்து, வடமொழியின் மெய் எழுத்துக்கள் முப்பத்தேழனுள், முப்பத்திரண்டாம் மெய்யாம்; இரண்டாவது, முப்பத்து மூன்றாம் மெய்யாம். இது தமிழில் 'சக' எனத் திரியும்.

'அது தொகுமிடத்து முன்னின்ற மொழியில் இரண்டாம் எழுத்து அழிந்தல்லது தொகாது,' என்றார். அதற்குதாரணமாகக் காட்டிய 'சநீதி'(சக + நீதி = சநீதி). என்னுந் தொகையில் அங்ஙனம் முன்மொழியின் இரண்டாம் எழுத்து அழிந்து நிற்றலை அறிக. வியஞ்சனம்--மெய்.

இங்கு ஒரு 'மெய்ச்சொல்' என்றதற்குக் காட்டப்பெற்றுள்ள முன்னை அடிக் குறிப்பையும் நோக்குக.

அதில் குறிக்கப்பெற்ற 'சாசுவன்' என்பது 'சக+அசுவன் = சாசுவன்' என்றானது போலும் !

5-ஆம் பாட்டு
கன்மதாரய சமாசம்

கன்மதாரய சமாசமாவது, பண்புத்தொகையாம்.

இத்தொகையைக் கூறும் பாட்டின் உரையில், 'பின்மொழிப் பண்புத்தொகை' என்றிருப்பதை 'இருமொழிப் பண்புத்தொகை' எனத் திருத்திக் கொள்க. என்னெனின், இத்தொகையைக் கூறும் பாட்டில் இருமொழிப் பண்புத்தொகை