பக்கம் எண் :
 
303

59-ஆம் பக்கம்

ஏகாந்தித்து - ஒன்று சேர்ந்து. துவாந்தம் - துவா என்பதை ஈற்றிலுடையது.

சந்திராந்தம் இன்னது என்பதனை 74-ஆம் பக்கத்தில் உள்ள அடிக் குறிப்பைக் கண்டறிக.

தொகைப் படலத்தின் குறிப்புரை முற்றிற்று.

4. தத்திதப் படலம்

தத்திதாந்தச் சொல்லாவது, தமிழில் கூறும் குறிப்புவினையாலணையும் பெயரேயாம் என்றுணர்க. தத்திதாந்தச் சொல் என்பது அன்னதாம் என்பதனைப் பிரயோக விவேக நூலாசிரியர் தத்திதப் படலத்திற் கூறிய முதற்பாட்டையும், அதன் உரையில், "முற்சொற்றன்னைத் துன்னும் தொடர்மொழி எல்லாம் ஒழித்துப் போய்ச் சேரும் பிரத்தியயத்தை உடைய சொல்லே தத்திதாந்தத்தை உடைய சொல்லாம். அதனை விரித்து உதாரணங் காட்டும் பொழுது,

'வலையான் முயன்றுண்பவன்-வலையன்'

என்னும் பகுபதக் குறிப்புப் பெயராம்" என்றதையும், விசேட உரையில், "பொதுப்பட, 'முற்சொற்றன்னை' என்றதனாலே தனிச் சொல்லும், தொகைச் சொல்லும் கொள்க. ஆதலின், தொகையுள்ளும் முன்னின்ற மொழியை விட்டுப் பின்னின்ற மொழியைக் கெடுத்துப் பிரத்தியயத்தைக் கூட்டி முடித்தலும், பின்னின்ற மொழியைக் கெடாது முற்றும் முன்னின்ற மொழியாக நிறுத்திப் பிரத்தியயங் கூட்டி முடித்தலுமாம்" என்றதையும், அவர் இரண்டாம் பாட்டின் உரையில் தத்திதச் சொற்களுக்குக் காட்டிய உதாரணங்களையுங் கண்டறிக.

இப்படலத்தில் உள்ள 'உண்ணுமிதனால்' என்பது முதலிய இரண்டு பாட்டுக்களிற் கூறப்பட்ட பொருள்கள் :

(1) இதனால் உண்ணும், (2) இதனை உரைக்கும், (3) இஃது உடையன், (4) இதனைப் பண்ணும், (5) இதிற் பயிலும், (6) இதனாற் பயன் கொள்ளும், (7) இதனை எண்ணும், (8) இதனுக்கு நாயகன், (9) ஈங்கிருக்கும், (10) இதனை நண்ணும், (11) இதனை ஒக்கும், (12) இங்குளான், (13) இவனுக்கு மகன்,