பக்கம் எண் :
 
304

(14) இவளுக்கு மகன், (15) இந்த வர்க்கத்தான் இவன், (16) இவனைத் தெய்வமாக உடையான் இவன் என்னும் இப்பொருள்களின்கண்ணும், பிற பொருள்களின்கண்ணும் தத்திதங்கள் நிகழும்; இவற்றை விளக்கி உரைக்கும் போது 'இதனால் உண்பான் யாவன் ? இதனை உரைப்பான் யாவன் ?" என 'யாவன்' என்னும் வினாச்சொல்லான் வினவி, அதன் விடையாக வருவதனைத் தத்திதச் சொல்லாம் என்று கொள்ளுதல் வேண்டும் என்றுணர்க.

மூன்றாம் பாட்டின் மூன்றாம் அடியில் புகண்மலி என்பதில் ழ், ண் ஆகத்திரிந்து எனக் கொள்க.

இப்பொருள்கள் சிலவற்றிற்கு ஈண்டு உரையில் உதாரணங்கள் காணப்படவில்லை. வேறு பிரதியில் இங்குக் குறித்த பொருள்கள் யாவற்றிற்கும் உதாரணங்கள் காணப்படுகின்றன. அவற்றை அடியிற் காண்க :

1. இதனால் உண்ணும்

'வலை' என்று வைத்து இதனால் உண்பான் யாவன் எனக் கருதினபொழுது அன் என்னும் பிரத்தியத்தை வைத்து 'வலையன்' என முடிக்க.

2. இதனை உரைக்கும்

'வேதம்' என்னும் சொல்லை வைத்து, இதனை உரைப்பான் யாவன் எனக் கருதினபொழுது இயன் என்னும் பிரத்தியத்தை அம் பின் வைத்து, அம் என்னுங் கடைச்சொல்லைக் குறைத்து, 'வேதியன்' என முடிக்க. பிரயோக விவேக நூலாசிரியர் இதற்கு, 'இதனை உரைத்தலாவது, 'வைதிகன்', 'பௌராணிகன்,' 'கவிஞன்' என்று உதாரணங் காட்டினர். (பிர--32-ஆம் பாட்டின் உரை.)

3. இஃது உடையன்

'கொந்தம்' என்று வைத்து, அன் என்னும் பிரத்தியம் பின் வைத்து, ஈறழித்துக் 'கொந்தவன்' என முடிக்க. இவ்வண்ணம் ஈறழியாது, 'வெற்பன்', 'சிலம்பன்' என்றானதறிக.

4. இதனைப் பண்ணும்

'மருந்து' என்று வைத்து, இதனைப் பண்ணுவான் யாவன் எனக் கருதின பொழுது வன் என்னும் பிரத்தியத்தை வைத்துக்