குற்றியலுகரத்து மெல்லொற்றை வல்லொற்றாக்கி 'மருத்துவன்' என முடிக்க.
5. இதிற் பயிலும்
'கூத்து' என்னும் சொல்லை வைத்து, இதிற் பயில்வான் யாவன் என்று கருதின பொழுது அன் என்னும் பிரத்தியத்தை வைத்துக் 'கூத்தன்' என்று முடிக்க.
'மஞ்சள் தோட்டம்', 'இஞ்சித் தோட்டம்' என்பவற்றைச் சுப்பிரத்தியத்தால் முடிக்க. இவையும் பயிலுதலால் பெற்றன.
6. இதனாற் பயன் கொள்ளும்
'வில்' என்று வைத்து, இதனாற் பயன்கொள்வான் யாவன் எனக் கருதின பொழுது இகரப் பிரத்தியம் வைத்து 'வில்லி' என்று முடிக்க.
7. இதனை எண்ணும்
'சோதிடம்' என்று வைத்து, இதனை எண்ணுவான் யாவன் எனக் கருதினபொழுது வன் என்னும் பிரத்தியம் வைத்துக் கடைகுறைத்துச் 'சோதிடவன்' என்று முடிக்க.
8. இதனுக்கு நாயகன்
'மலை' என்று வைத்து, இதனுக்கு நாயகன் யாவன் எனக் கருதின பொழுது அன் என்னும் பிரத்தியம் வைத்து 'மலையன்' என முடிக்க. பிரயோக விவேக நூலாசிரியர், 'இதனுக்கு நாயகனாவது', 'வைதர்ப்பன்', 'நைடதன்', 'கௌசலன்', 'வைகைத் துறைவன்', 'குமரிச்சேர்ப்பன்', 'மலையமான்', 'புனனாடன்', 'தமிழ் நாடன்', 'புலியூரன்' என உதாரணங் காட்டினர். (பிர--தத்தித-ப-31-ஆம் - பா- உரை.)
9. ஈங்கிருக்கும்
'பட்டினம்' என்று வைத்து, அங்கிருப்பான் யாவன் எனக் கருதினபொழுது வன் என்னும் பிரத்தியம் வைத்துக் கடை குறைத்துப் 'பட்டினவன்' என முடிக்க.
ஈண்டு உரையாசிரியர், 'பட்டினத்திலிருப்பார் மற்றில்லை யோவெனில்' என்று கூறி, அதனைச் சாதித்தற்குச் சில வாக்கியங்களைக் கூறியிருக்கின்றார். அவ்வாக்கியங்கள் பெரிதும் பிறழ்ந்திருத்தலின், ஈண்டு எடுத்துக் குறிக்காமல் விடுக்கப்