பக்கம் எண் :
 
306

பட்டன. ஆயினும், அவற்றுள் சில வாக்கியங்கள் பெரிதும் பிழைபடாமல் இருக்கின்றன. அவை: 'சேற்றில் தோன்றுவன.....குவளையும் ஆம்பலும் முதலாக மற்றும் பல உளவேயாகிலும், பங்கத்திற் சனித்தலால் 'பங்கசம்' என்று தாமரைக்குப் பெயராயிற்று; அதுபோல, மற்றுமுளராகிலும், இவனைப் 'பட்டினவன்' என்று சொன்னார். பங்கசம் என்பது தாமரைக்கே பெயர் என்பது மரபு பட்டு வாராநின்றது என்பாயாகில், அதுபோல இவனுக்கும் அப்பெயர் மரபு பட்டு வாராநின்றது எனக்கொள்க,' என்பன.

10. இதனை நண்ணும்

'சித்தி' என்று வைத்து, இதனை நண்ணுவான் யாவன் எனக் கருதின பொழுது அன் என்னும் பிரத்தியம் வைத்துக் கடைகுறைத்துச் 'சித்தன்' என்று முடிக்க.

இவ்விடத்து நண்ணினான், நண்ணுகின்றான், நண்ணுவான் என மூன்று காலத்தையும் குறித்தது என்பது.

11. இதனை ஒக்கும்

'சிங்கம்' என்று வைத்து, இதனோடொப்பான் யாவன் எனக் கருதின பொழுது சுப்பிரத்தியம் வைத்துச் 'சிங்கம்' என முடிக்க. இவ்வண்ணம் 'நூல்' என்றும், 'பாவை' என்றும் முடிக்க.

பிரயோக விவேக நூலாசிரியர் இதற்கு 'உதனோடொத்தலாவது, 'பொன்னன்னான்', 'மயிலன்னாள்', 'கனக சதிர்சன்', 'இருடி துல்லியன்' என உதாரணங் காட்டினர். (பிர--31-ஆம்-பா-உரை.)

12. இங்குளான்

'பாண்டி நாடு' என்று வைத்து, இங்குள்ளான் யாவன் எனக் கருதின பொழுது அன் என்னும் பிரத்தியத்தாற் 'பாண்டி நாடன்' என முடிக்க.

இவ்வண்ணம் 'சோழ நாடன்', 'தொண்டை நாடன்', 'வடுக நாடன்' என முடிக்க.

13. இவனுக்கு மகன்

'பாண்டு' என்று வைத்து, இவனுக்கு மகன் யாவன் எனக்கருதின பொழுது வன் என்னும் பிரத்தியத்தான் இறுதி