பக்கம் எண் :
 
312

'இவ்வண்ணம் மற்றுமியற் றிக்கொள்ளே'

என்றார்.

நன்னூலாசிரியர், பகுதிகளின் ஈற்றை நோக்கி எல்லாப் பகுதிகளையும் இருபத்து மூன்று கூறுபாட்டில் அடக்கினார். அதனை, நன்னூல், பதவியலில்,

'நடவா மடிசீ விடுகூ வேவை
நொப்போ வௌவுரி ஞுண்பொருந் திருந்தின்
தேய்பார் செல்வவ் வாழ்கேள் அஃகென்
றெய்திய இருபான் மூன்றா மீற்றவும்
செய்யென் னேவல் வினைப்பகாப் பதமே.'

எனவரும். 10-ஆம் சூத்திரத்தாலும், அதன் உரைகளாலும் அறிக. இப்படலத்தின் இரண்டாம் பாட்டின் விசேட உரையில், உரையாசிரியர், 'அவற்றுள் கருமத்தை நீங்காத தாது, கருமத்தை நீங்கின தாது எனத் தாது இரு வகையாம். வடமொழிப் புலவரும் சகருமகம், அகருமகம் என வழங்குவர்' என்று கூறியவற்றைத் தமிழ் நூலார் முறையே செயப்படுபொருள் குன்றாவினை, செயப்படுபொருள் குன்றியவினை எனக் கூறுவர் என்றறிக. இப்படலத்தின் ஆறாம் பாட்டில் நூலாசிரியர்,

'ஆட்டாற்று தீற்றாதி தாதுக் களையடற் காரிதமென்று,
ஓட்டா அறிக'

என்றதற்கு ஊரையாசிரியர், 'ஆட்டு, ஆற்று, தீற்று முதலிய காரிதத் தாதுக்களாம். 'முன்பிற்கேவலத் தாதுவோடு இவற்றிற்கு வேறு பாடென்?' எனின், ஆடு என்பது கேவலத் தாதுவாய், அத்தொழிலையே மற்றொருவனைச் செய்வி என்னும் பொருண்மேல் வினைக் குறிப்பிலே பிரத்தியம் பண்ணி, ஆட்டு எனவும்; இவ்வண்ணம், ஆறு ஆற்று, தின் தீற்று எனவும் வந்து வேறு பட்டன' எனக் கூறிய உரையில் கேவலத் தாது என்றது தன் வினைப்பகுதியை எனவும், காரிதத் தாது என்றது பிறவினைப் பகுதியை எனவும் அறிக.

தன்வினைப்பகுதிகளின் ஒற்று இரட்டுதலாலும், இடையில் உள்ள மெல்லொற்று வல்லொற்றாகத் திரிதலாலும், தன் வினைப்பகுதிகளோடு வி, பி என்பனவும், கு, சு, டு, து, பு, று என்பனவும் சேர்தலாலும் தன்வினைப்பகுதிகள் பிறவினைப்