பகுதிகளாகும். அவற்றுள், இங்குக் காட்டியவை ஒற்று இரட்டுதலாலும், கு, சு, டு முதலியவற்றின் ஒன்று சேர்தலாலும் தன் வினைப்பகுதிகள் பிறவினைப்பகுதிகளானவை. 'உறங்கு, உறக்கு', 'திரும்பு, திருப்பு' என்பன இடையில் உள்ள மெல் ஒற்று வல்லொற்றானவை. 'வா, வருவி', 'நட, நடப்பி' என்பவை வி, பி சேர்தலால் பிறவினை ஆனவை. அவற்றுள், இந்நூலாசிரியர் ஒற்று இரட்டுதலாலும், கு, சு, டு முதலியவற்றில் ஒன்று சேர்தலாலும் தன்வினை பிறவினையாதலைக் கூறினர்.
நன்னூலாசிரியர், வி, பி சேர்தலால் தன்வினைப் பகுதிகள் பிறவினைப் பகுதிகளாதலைக் கூறினர். அதனை,
'செய்யென் வினைவழி விப்பி தனிவரிற்
செய்வியென் னேவல்'
என்றதனால் அறிக. இவ்விரண்டு நூலினும், தன்வினைப் பகுதிகள் பிறவினைப் பகுதிகளாதற்குரிய மற்ற வகைகள் 'உரையிற்கோடல்' என்னும் உத்தியாற் கொள்ளப்படும் என்றறிக.
இவை இயல்பாகிய ஏவலின்மேல் ஓரேவல் வந்தவை என்றறிக.
'ஆடு' 'தின்' என்பன இயல்பாகிய ஏவற்பொருளில் வந்த பகுதிகள்; ஆட்டு, தீற்று என்பன. இயல்பாகிய ஏவலின் மேல் ஓரேவலாகிய பொருளில் வந்த பகுதிகள் எனக் கொள்க.
நூலாசிரியர், அதன் பின்,
'உரையின் படியொப்பில் விப்பிபின்பு
மூட்டா வறிகா ரிதக்கா ரிதம்.'
என்றார். உரையாசிரியர், 'ஆடினான்' கேவலத்தாது; 'ஆட்டினான்' காரிதத்தாது. இவற்றின் பின்பு வி, பி என்னும் பிரத்தியங்கள் வந்தால், அவை, காரிதக் காரிதத் தாதுவாய், 'ஆட்டுவி', 'ஆற்றுவி', 'தீற்றுவி', 'கேட்பிப்பி', 'வார்ப்பிப்பி', 'உண்பிப்பி', 'தின்பிப்பி' என வரும்' என்றார். நன்னூலார் இதனை 'இணையினீ ரேவல்' என்றார் (நன்-ப. சூ. 11.)
சங்கர நமச்சிவாயப் புலவர் இச்சூத்திரத்தின் விசேட உரையில் "செய் என்னும் வாய்ப்பாடுகள், ஏவல் வினைமுதல் ஒன்றையும், இயற்றும் வினை முதல் ஒன்றையும், இருவருள் ஒரு