பக்கம் எண் :
 
316

பின்பு நூலாசிரியர்,

'முன்பிற் றாதுவின்கட்
காட்டா வறியவை காரிதக் காரிதக் காரிதமே.'

என்றார்.

அதற்கு உரையாசிரியர் உரையில் 'முன்பு சொல்லிப் போந்த காரிதக் காரிதத் தாதுவின்மேல் பின் சொன்ன வி, பி என்னும் பிரத்தியங்கள் சேர்ந்து காரிதக் காரிதக் காரிதமாம். உதாரணம்:-- ஆட்டுவிப்பி, ஊட்டுவிப்பி என வரும். கருத்தா கருமங்களும் அவ்வாறே கொள்க' என்றார். இவை இயற்கை ஏவலின்மேல் மூன்று ஏவல் வந்தனவாம். இங்ஙனம் தமிழில் வருதல் அரிது; வடமொழியில் உள்ளனவாயின், கண்டு கொள்க.

இப்படலம், எட்டாம் பாட்டின் உரையில் துமந்தப்பிரத்தியங்களுள் 'பொருட்டு' என்பது நீங்கலாக, மற்றவற்றிற்குக் காட்டிய உதாரணங்களை நோக்கின், கு, அ என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களிலும்; வான், பான் என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களிலும் அடங்குவனவாயிருக்கின்றன. 'பொருட்டு' என்னும் பிரத்தியத்திற்குக் காட்டிய உதாரணம் நான்காம் வேற்றுமை ஏற்ற தொழிற்பெயரெனக் கொள்ளுதற்குரியதாகும். உரையாசிரியர் விசேட உரையில், 'துமந்தமாவது நாலாம் வேற்றுமையின் அல்லது வாராமையின், அதனையும் இதனோடு ஒப்பித்தே முடிக்க' என்றதையும் ஈண்டு நோக்குக.

இப்படலத்தின் 9-ஆம் பாட்டில் நூலாசிரியரும், அதன் உரையில் உரையாசிரியரும் ஒரு கருத்தாவை உடையனவாய் இரண்டு தாதுக்கள் வரின், அவற்றுள், முன்பு நின்ற தாதுவின் கண் ஆ, இட்டு, து, உ, இ என்னும் ஐந்து பிரத்தியமும் வரும். அவை துவாந்தப்பிரத்தியம் எனப்படும் என்றனர். உரையாசிரியர் அவற்றிற்கு 'உண்ணாப் போனான்' என்பது முதலிய உதாரணங்களைக் காட்டினர். அவற்றுள், உண்ணாப் போனான் என்றதனோடு பொன்னன் என்பதைச் சேர்த்து, 'பொன்னன் உண்ணாப் போனான்' என்று கொண்டு, இதில் உண்ணா என்னும் வினையெச்சத்தில் உண் என்பதும், போனான் என்னும் வினைமுற்றில் போ என்பதுமாகிய இரண்டு தாதுக்