பக்கம் எண் :
 
317

களும் பொன்னன் என்னும் ஒரு கருத்தாவை உடையனவாய் வந்தன எனவும்; முன்னுள்ள உண் என்னும் தாதுவின்கண் ஆ என்னும் துவாந்தப்பிரத்தியம் வந்தது எனவும் கண்டு கொள்க. மற்ற உதாரணங்களோடும் இங்ஙனமே தனித்தனி ஒவ்வொரு கருத்தாவைச் சேர்த்து அவை அங்ஙனம் வருதலை அறிந்துகொள்க.

உரையாசிரியர் பின்னர்ப் 'பல தாது வரும்போது பின்பிலதனைக் குறித்து முன்பிலதனுக்கு ஆக்குக' என்று கூறி, அதற்கு 'உண்டு தின்று உலாவி இருந்து போனான்' என உதாரணங் காட்டினர்.

இதில், 'உண்டு' என்பதனை நோக்கத் 'தின்று' என்பது பின்பிலது எனவும்; 'தின்று' என்பதனை நோக்க 'உலாவி' என்பது பின்பிலது எனவும்; 'தின்று' என்பதனை நோக்க 'உண்டு' என்பது முன்பிலது எனவும்; 'உலாவி' என்பதனை நோக்கத் 'தின்று' என்பது முன்பிலது எனவும் கொள்க. இங்ஙனமே மற்றவற்றையும் அறிந்துகொள்க.

நூலாசிரியர் இப்படலத்தின் 11-ஆம் பாட்டில், ஆன் முதலிய பன்னிரண்டு பிரத்தியங்கள், பகுதிகளில் தடைப்பொருளில் வரும் என்றார்.

உரையாசிரியர், இவற்றைத் 'தடைப்பொருள் விளக்குந் தாதுவின்பின், முன் நாம் சொன்ன மரபே வரும்' என்றார். தடைப்பொருள் விளக்கும் தாது இன்மையின், அது பொருந்தாது என்க.

நூலாசிரியர் அங்ஙனங் கூறியிருத்தலை,

'ஆனாளா ரார்களொ டாதா விலன்மற் றிலளிலரும்
தானா மிலர்க ளிலதில தாதுத் தடைப்பொருட்கண்
மேனா முரைத்த மரபே வரும்.'

என்றதனாலறிக. இது வடநூலைப் பின் பற்றிய இலக்கணமாகும்.

உரையாசிரியர் அவற்றிற்கு நடவான் முதலியவற்றை உதாரணமாகக் காட்டினர். அவற்றிற்குத், தமிழ் நூன்மரபின்படி இலக்கணங் கூறின், அவற்றுள், நடவான், நடவாள், நடவார், நடவார்கள் என்பனவற்றில் எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது எனவும்; ஆன் முதலியன அவற்றின் விகுதிகள் எனவுங் கூறப்படும். நடவாது என்பதில் ஆ எதிர்