கன்றுக்குட்டி என்று இளமைப் பெயரிரண்டு இணைந்து மாட்டிளமைக்கு
ஆகி வருதல் வழுவமைதி.
284. நூ: மகஇறு நிலைபெற் றுயர் திணைக் காகும்.
பொ:
மக என்னும் இளமைப் பெயர் ஆண், பெண், பலர் பாலீறு
பெற்று உயர்திணையாகும்.
சா:
மக+அன்=மகன்; மக+அள்=மகள்; மக+அர்=மக(£)ர்.
மக+கள்+மகக்கள்-->
மக்கள். இது மாந்தரையும்
குறிக்கும். (மா+கள்)
மாக்கள் பலவின்பாற் சொல்லே; அத்தகையாரையும் சுட்டும்.
மற்று மாக்கள் (மணிமேகலை) என நன்மக்களைக் குறிக்கும் வழக்கு மகக்கள்
என்னும்
புணர்ச்சியில் இருகுறில் ஒரு நெடில் திரிபு பற்றி மாக்கள் என
நீண்டு நின்றதெனக் கொள்க.
285. நூ: பார்ப்பு திரிந்து பெண்ணிள மைக்காம்;
பிள்ளை உயர்திணை ஆண்பெண் பொதுப்பெயர்
பொ:
‘பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை’ என்று தொல்காப்பி யர்
கூறிய இளமைப் பெயரிரண்டில்
பார்ப்பு என்பது திரிந்து பெண்டிர்க்குச்
சூட்டுப் பெயராதலும், பிள்ளை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுப்
பெயராதலும் நடைமுறை.
சா:
பார்ப்பு-பாப்பு-பாப்பா=பாப்பாத்தி (குழந்தையம்மை) இவை இன்றும்
பெண் குழந்தையர்க்கு வழக்கிலுள.
ஆண் பிள்ளை; பெண் பிள்ளை;
ஆண்பிளே,பெண்பிளே எனத்திரிந்து பெரியோரைக் குறித்தல் வழு.
ஆண்பிளைப் பிள்ளை,பெண் பிளைப் பிள்ளை என வருதல் மிகு வழு.
பிள்ளை என்பது தனித்துக்குறிக்கும்
போது ஆணைச்சுட்டுவதும் உண்டு.
மரபுப்புறனடை
286. நூ: கூறிய வற்றுள் மாறியும் வருமே.
பொ:
கூறிய சொற்களிற் சில மரபு மாறியும் வரும்.
சா:
தென்னம்பிள்ளை; கிளிப்பிள்ளை; எலிக்குஞ்சு; மயில் குட்டி
போடும் (சிறார் வழக்கு) எருமைக்
கன்று முதலியன அத்தகையன.
பிள்ளை குட்டியெல்லாம் நலமா? குட்டி சிறு பெண்ணாரையும், சிறு
பொருள்களையும் குறித்தல் இக்கால
வழக்கு. அவருக்குப்
பிள்ளையா? குட்டியா? நல்ல குட்டி; குட்டிச்சுவர்; பூனைக்குட்டி. ஐயா,
அப்பா,
ஆத்தா, அம்மா என்னும் ஆண் பெண்
|