பக்கம் எண் :
 
கூப

கூப்பீடுகளாகிய மாவட்ட அழைப்பு முறையும், சார், வாத்தியார், சாமி
என்னும் அயல் வழக்கும் நிலையில்லாதன.

 

    பாப்பா, பிள்ளை என்பன முற்கூறியவாற்றான் அடங்கும்.

 

பிற
பிரித்துக்காட்டல்

 

287. நூ: பலபொருள் ஒருசொல் வினைபெய ராலும்
        தகுதனி அடைதர லானும் விளங்கும்.

 

    பொ: பலபொருள் தரும் ஒருசொல், தன்னைச்சாரும் வினையாலும்,
பெயராலும், தக்க தனியடை அணைதலானும் அச்சூழலில் தன் பொருளை
விளக்கும்.

 

    சா: பெயரை நன்னூல் இடம், இனம், சார்பு என விரிக்கும். 
வெளுப்பார் உருப்படி கொண்டுவந்தார்; உருப்படியும் வண்ணமும் உதிரியும்
இசையரங்கில் இறுதியாம்.  இவற்றில் முறையே உடையும், சிற்றிசைப்பாடலும்
விளங்கின.  இவை வினையாலும் பெயராலும் விளங்கியவாறு காண்க. 
உருப்படி எடுத்தார் என்பது பொதுவினையால் இருமையையும் சுட்டலும்,
உருப்படி செய்தவர் என்பது பொதுப்பெயரால் உருப்படி
யிசையியற்றியவரையும், சொத்தைக் காப்பாற்றி முழுமைப்படுத்தியவரையும்
சுட்டலும் அறிக.

 

    மரமா; கைம்மா; சிறைமா (அஞ்சிறைத்தும்பி) பாய்மா எனப் பெயர்

வினையில் தகுதனி அடைதரத் தெளிவாம்.

 

288. நூ: இருதிணை ஆண்பெண் பெயர்வினைப் பொதுவை
உறுதனி வினைபெயர் ஒதுக்கிக் காட்டும்.

 

    பொ : இருதிணையிலும், ஆண் பெண்கட்குரிய பொதுவினைப்
பெயர்களைத் தனிப்பெயரும் வந்து பிரித்துக்காட்டும்.

 

    சா: இம்மாடு ஐந்துபடி பால் கொடுக்கும் (ஆமாடு).

 

    உழுத பின்னும் வண்டி இழுக்கச் சோரா இம்மாடுகள் (எருது).  என்பன
அஃறிணைப் பெயர் வினைக் காட்டுகள்.

 

    கள்வரைத் துரத்தினர் காவலர்.  (பெண்டிர் காவலராயின் பொதுவுறாது).

 

    இன்று இம் மருத்துவ மனையில் ஐவர் பேறுற்றனர் என்பன
உயர்திணையில் பிரித்துக்காட்டின. அறிவறிந்த மக்கட்பேறு என்பது ஆண்
மக்களை விளக்குவதாய்க் கூறல் இற்றை நாட்கேற்புடைத்தன்று; பெரிதும்
உடற்சார் சொற்களே பிரித்திசைப்பன.

 

பொருள் வழக்கு

 

289. நூ: ‘செயப்படு பொருளைச் செய்ததுபோலத
        தொழிற்படக் கிளத்தலும் வழக்கினுள் உரித்தே.’