பக்கம் எண் :
 
New Page 1

   

பொ: செயப்படு பொருளை வினைமுதல் போல எழுவாய் வினையிட்டுக்
கூறுவதும் வழக்கின்கண் உரித்தாம்.

    சா: இத்துணி நான் வாங்கியது.  இக்கட்டுரை அவர் எழுதியது. 
உம்மையான் செய் பொருளை வினை முதலாகக் கூறுவதே யன்றிக் கருவி,
நிலம், செயல், காலங்களைக் கூறுவதும் அமைவனவாம்.  இத்தூவல் அவர்
எழுதியது; இவ்வீடு நீ இருந்தது.  இவ்விசை அவர் பாடியது; இந்நாள்
திரு.வி.க. பிறந்தது என்பவற்றைக் காட்டும் பிறவும் துகர இறுதித்
தொழிற்பெயராய் அடங்குமேனும் கால வேறுபாடு பற்றியும், பெருவழக்குப்
பற்றியும் கூறப்பட்டன.  கல் இடித்தது, வண்டி தவறியது - எனக்கல்லில்
இடித்துக்கொண்டதையும், வண்டியைத் தவற விட்டதையும் கூறும்
வழக்கையும் உட்படுத்திக்கொள்க.

பெயரமைவு

290. நூ: இயற்பெயரோடு சிறப்புப் பெயர்வரின்
        முன்னும் பின்னும் ஏற்ப ஏற்கும்.

    பொ: இயற்பெயரோடு கல்வி முதலியவற்றினாம் சிறப்புப் பெயர்
வருங்கால் முன்னோ, பின்னோ வழக்கிற் கேற்ப இயைந்து வரும்.

    சா: தெய்வப் புலவர் திருவள்ளுவர், பாவேந்தர் பாரதிதாசன், ஞா.
தேவநேயப் பாவாணர், பரிதிமாற்கலைஞர், திரு. திரு. வி. க., துணைவேந்தர்
மு. வரதராசன்; முனைவர் சி. இலக்குவனார்; மு. க. மெ. மு.

291. நூ: படர்க்கைத் தனிப்பெய ரோடு சுட்டு
       படர்கை யுறின்இரு புறம்வரும்; வினைப்படும்
       பெயரைச் சுட்டப் பின்னே வருமே.

    பொ: படர்க்கைப் பெயர் வினைப் படாது தனித்து நிற்க சுட்டுப் பெயர்
சார்ந்து படரலுற்றால் பெயரின் விடுபாடு-இருபுறமும் வரும்; வினைப்படும்-
தொடரில் வந்தால் பின்னே மட்டும் சுட்டுப் பெயர் வரும் என்பது.

    நடிகன் அவன்; அவன் நடிகன்.  முத்தான தங்கையவள்
வாழ்க்கைப்பட்ட (பாண்டியன் பரிசு.).

    புகார் நகர் அதுதன்னில் (சிலம்பு - காதை 1).

    ‘அழுங்குழவியது’வே போன்றிருந்தேனே (குலசேகரர்) முகவரியின்
பெயர்க்குப்பின் எழுதும், திரு. தங்கையனார்-அவர்கள் என்பது இவ்விதியால்
செல்விதாம்.  நடிகை வந்தாள்; அவளை மக்கள் மொய்த்தனர்.  அமைச்சர்
வந்தார்; அவரை அலுவலர் சூழ்ந்தனர்.