ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (திருக்குறள்)
என வினைப்படுந் தொடர்ப் பெயர்க்கு முன் சுட்டு வருதல் ஒருபால்
செய்யுள் இலக்கிய வழக்கு என்க.
சிலசொல்
வரையறை
292. நூ: செலலுறு வினைகள் படர்க்கை மட்டே
வரலடிச் சொற்கள் தன்மை முன்னிலை.
பொ:
செல்வது குறிக்கும் வினைச்சொற்கள் படர்க்கையை மட்டும்
சாரும் வருதல் பற்றிய வினைச்
சொற்கள் தன்மைக்கும், முன்னிலைக்கும்
ஆகும்.
சா:
அவனிடம் சென்றானாம்; என்னிடம் வந்தான்; உன்னிடம் வந்தானா?
வி:
முன்னூல் கூறிய தரல், கொடை இடவரையறையற்றன. ‘செலலுறு
வினைகள்’ எனப் பொதுவிற் கூறியதனால்
அவனிடம் போனான் முதலியவும்
படர்க்கைக் காதல் கொள்க. ‘வரலடி வினை’ என்றது முக்கால வடிவங்களும்
இத்தன்மையனவே-எனற்கு. உறுதல், அடைதல் போலும்
பொதுவினை மூவிடத்திற்கும் பொதுவாம்.
293. நூ: முழுமையும் வரின்முற் றும்மை தவிரா.
பொ:
முழுமை தழுவிவரும் சொற்கள் முற்றும்மை தவிராவாம்.
சா:
முத்தமிழும் பயின்றான். ஏழிசையும் வல்லான். தொகைச் சொல்
அன்றி முழுமைச் சொல்லிலும்
உம்மை வரும்.
சா: |
உலகனைத்தும் இகழ்ச்சி சொல |
‘உலகம் யாவையும்’ |
|
உடல் முழுதும் வலிக்கிறது. |
(எல்லாம்) |
இன்று சாதி இருத்தல் வேண்டுமென்று யாரும் கூறார்.
இனிச் சமயத்தில் நிலவைத் தேவனாக்கி எதுவும் எழுதார்.
நாள் எல்லாம் உழைத்தும் நலிகிறான் பாட்டாளி.
எல்லாமும் என வாராதது இறுதி மவ்வொற்றில் உம் உடனொலித்தல்
வாய்ப்பின்மையான்
மறைந்தொலிக்கும் என்க.
நாளும்-தினமும், தினம்-(நாளும்) - ஒப்பு.
வடமொழிக்குப் பேச்சு வழக்கு என்றும் இல்லை.
அணுத்திரளாத பொருள் எங்கும் இல்லை எனக் கால இடவரையறைப் படுத்தலும் உம்மை பெறும்.
294. நூ: பல்பொருள் தொகுப்பு தொகுதி ஒருமை.
|