பொ:
தொகையான பல்பொருள் தொகுதி ஒருமையாம் (ஒருவகைக் கூறாய்வரின் இதனைச் சாதி ஒருமை என்றும்
கூறுவர்).
பொதுக்கூட்டம்
கை மீறியது
இத்தென்னந் தோப்பு பெரியது
பாய்; படை; மாலை. |
} |
‘பலவின் இயைந்தவும் ஒன்றெனப்படுமே’ என்றஅகத்தியர் போலிப்பாடல் கருத்தும் ஈதென்க |
சிவஞான போதம் முதல் நூற்பாவில் ‘அது’ என்பதை அவை எனப் பொருளூட்டல் விரிசலைப் பிளவாக்கல்.
295. நூ: தனிப்பொருள் தன்மையை விளக்கும் வினையையும்
பொதுப்பெயர்க் குறுவினை யையும் அறிந் தாளல்
பொ:
தனித்தன்மையுடைய பொருளின் பண்பை விளக்கும் வினையையும் பொதுத்தன்மைப் பொருளின் பெயர்க்குரிய
வினையையும் அறிந்து கையாள வேண்டும் என்பது
சா:
உணவு உண்டான் என்பது இக்கால் பொது. நீர் குடித்தான், காய்கறித்தான், எலும்பு கடித்தான்; முறுக்கு
மென்றான், நுங்கு உறிஞ்சினான்; பால் பருகினான்; மாம்பழம் சப்பினான்; பாற்பாகு நக்கினான்;
தீனி தின்றான்; நொறுவை கொறித்தான்; கரும்பு அருந்தினான் என்பன சிறப்பு.
சோறும் கறியும் உண்டான் என்றும், வேட்டி சட்டை கட்டினான் என்றும் வரும் அவற்றை வழுவமைதியாகக்
கொள்க.
பூப்பறித்தல், பூக்கிள்ளல், பூப்பிடுங்கல், பூவெடுத்தல் (இரு - குரல்) என்னும் மாவட்ட வழக்குகளிலும்
பூக்கொய்தல் என்பதே மென்மைக்கு இயைதல் போலும் வினையியைபுகளையும் ஈண்டே அடக்குக. சங்கெடுத்தல்,
சங்கூதுதல், சங்கு முழங்குதல், சங்கு பிடித்தல் என்னும் சிறப்புச் செயல் வினைகள் சங்கொலித்தல்
என்னும் பொதுவில் அடங்கும்.
ஒரு
பொருள் பல சொல்
296. நூ: ஒருபொருள் இருசொல் சிறப்பினால் இணைந்துறும்.
பொ:
ஒரே பொருளுடைய இரு சொற்கள் பொருட்சிறப்பிற்காக இணைந்துவரும்.
சா:
மீமிசை நயமன்றம்; பெரும் பேராசிரியர் (மகாமகோ பாத்தியாயர்) உயர்ந்தோங்கு மலை;
மாபெரும் அநீதி (தால்சுதாயி) அரை (நா) ஞாண்கொடிது இவை கூறியது கூறினும் மிகைப் பொருளை விளைத்தலின்
குற்றம் இல்லை என்பது.
கைக்குட்டை என்பது சிறுமைப் பொருள் குறிக்கும் இரு சொற்களே இயைந்து துணைச் சொல்லன்றிக் கன்றுக்குட்டிபோலக்
குறிப்பதும் ஆகும். உள்ளங்கை என்பதில் இடை அம் - அகம்
|