என்பதன் (அஞ்செவி) இடைக்குறை யெனின் ஒருபொருட் பல
சொல்லாம். ஆயின் அஃது அம் சாரியை
எனலே இயையும்.
அருகண்மை என்பது அருகாமை என முரண்படு பொருள். தரு
சொல்லாய் வழங்கல் அரண்கெடு ஒழுங்காம்.
297. நூ: அயற் சொல்விரவிய இருசொல் நீக்குக
நு:
மேலதற்கு ஒரு சிறப்பு விதி கூறுகிறது.
பொ:
அவ்விரு சொல் தமிழ்ச் சொல்லொடு பிறமொழிச் சொல்லொன்று
கலந்து வந்ததாமேல் நீக்குக.
ஆவலாசை; பாசக்கயிறு; காரான்பசு; கேட்டுக்கதவு; நடுசெண்டர்;
பேக்பை; சாப்புக்கடை; ஆர்ச்சுவளைவு
முதலியவற்றை முன்பின் விலக்கித்
தமிழ்மட்டாய் ஒற்றைப் படுத்துக. டூக்கா-டூ என்பது சிறார்
மொழியில்
(ditto-o)
மேற்படியான் என்பதைக் குறித்து, புளிப்பா - இனிப்பா எனும் முறையில்
காயா, பழமா எனக் கேட்கும் வழக்கிற்கு மாற்றாய் டூவா சேர்த்தியா
எனவிருந்து பின் ஒட்டியது.
அடுக்கு
298. நூ: பொருள்முறை இசைநிறை அசைநிலைக் கொருசொல்
இரண்டு மூன்றுநால் முறைமை அடுக்கும்.
பொ:
பொருள் முறைமைக்கும், இசை நிறைவுக்கும், அசை
நிலைமைக்கும் ஒரு சொல் முறையே இரண்டு வரையும்,
மூன்று வரையும்,
நான்கு வரையும் அடுக்கிவரும்.
பொருள்முறை-விரைவு, தெளிவு. திருடன், திருடன்; பிடி, பிடி; பாம்பு,
பாம்பு; தீத்தீத்தீ-இசை
நிறை. நெருப்பு, நெருப்பு என்பதன் சுருக்கச் சொற்
கோவையாதலின் இசை நிறைந்தது. வேண்டாம்
வேண்டாம் இந்தி
வேண்டாம் என்பதும் இசை நிறை பற்றிவரும். நான்கடுக்கு அருகிய
இலக்கிய வழக்கு;
ஒக்குமே, ஒக்குமே, ஒக்குமே, ஒக்கும் அசை நிலை (யா.
கா.)
‘போயழைத்திடுமின் இன்னே’ என்று மும்முறை விரைபொருளிற்
கூறியது (குசேலர் காதை) நன்னூற்படி.
எனினும் ஈண்டு வகுத்தது இலக்கியத்
தொடுவழக்கு இயல்வது நோக்கி என்றறிக.
மேன்மேல், மென்மெல; பை(ய)ப் பைய (கலி) என்பனவும் அடுக்கு.
299. நூ: குறிப்பொலி பற்றிய இரட்டைக் கிளவி
பிரிக்கப் படாவே: பிரிப்பினும் பொருளில.
பொ:
குறிப்பொலி பற்றியமையும் இரட்டைக் கிளவி இரட்டையினின்றும்
பிரிக்கப்பட மாட்டா; பிரித்தாலும்
பொருளிலவாகும்.
|