மாட்டை மடியில் கறப்பதுபோல் இடமறிந்து செயலாற்ற
வேண்டுமென்பார் அண்ணா.
அவனது வலக்கையைக் குலுக்கினேன்.
கையில் - கோடுகளைக் கண்டு குறி சொல்வது செம்மையா? எனது
தலையில் அடித்து ஆணையிட்டான் என்பது
போல்வனவும் அடக்குக.
இவ்விதி - 1. மாட்டை, பாலைக் கறந்தான், 2. கையால் மையால்
எழுதினான். 3. என்னோடு அன்போடு
பேசினான்; 4. ஏழைக்கு வட்டிக்குக்
கொடுத்தான்; 5. கடலிலிருந்து சிப்பியினின்று முத்து எடுக்கப்படும்;
6.
முகத்தில் கண்ணில் குறிப்புணரலாம்-என வேறு வேறு
பொருளுணர்ச்சியிலாயினும் வெறுப்பிசைத் தொடரை
விலக்குதல் விளங்குக.
வி:
மற்று முதலெது சினையெது என்ற முடிவில் - முதலெனப்
பார்ப்பின் சினை தனித்திலவாய், சினையெனப்
பார்ப்பின் முழு முதல்
தனித்தின்றாய்ப் போகும் என்ற கூற்று, ‘மரத்தில் மறைந்தது மாமத
யானை;
மரத்தை மறைத்தது மாமத யானை’ (திருமந்திரம்) என்னும் ஏரணத்திற்கு
ஒவ்வு மல்லது
சொல்லியலுக்கு ஒவ்வா என்க மற்று உடலுக்குக் கையும்,
கைக்கு விரலும், விரலுக்கு உகிரும் முதல்
சினையாய் மாறல் என்னும்
மயிலைநாதர் உரையே மாண்புறுவது.
ஒருவர் - ஒருவள்
303. நூ: ஒருவர் என்னும் சொல்லின் இறுதி
அருவெனும் சிறப்பொரு மை; வினை அற்றே.
பொ:
ஒருவர் என்னும் சொல்லின் இறுதி நிலையில் உள்ள ‘அர்’
என்பது சிறப்புப் பற்றி வந்த
ஒருமையே. அச்சொல்லின் வினையும்
அவ்வாறே பலர்பால் இறுதிபெற்று வரும்.
சா:
ஒருவர் வந்தார்; அவர் வந்தார்.
ஒருவர் என்னும் சொல்லின் முதனிலை ஒருமை என்றும், இறுதி நிலை
பன்மை என்றும் குழம்புதல் வேண்டா.
இக்குழப்பத்தைக் குமரகுருபரர்
ஒருவனாய் மங்கை பங்கனாய் இருமையனாய் இருப்பதைக் குறிக்க எழுந்தது
என்று கூறியது இலக்கிய நயமே.
வினையிறுதியாய் ஆர் ஈறே வருதலும் அர் ஈறு வாராமையும் காண்க.
இவ்வுணர்ச்சிப் பாகுபாட்டு வளர்ச்சிக்
காலத்துப் பார்ப்பனக் குமுகாயம்
ஒதுங்கி இருந்தமையின் இன்று அவர் வீட்டு வழக்கு வளரா
ஒருமையாய்த்
திகழ்வது என்க. அற்றே என்றமையான் ஒருவர் பின்வரும் அர் ஈறே வினைக்குக்
கொளாது மதிப்
|