பக்கம் எண் :
 

    கிழவன் என்னும் வழக்கிற்குப் பயின்ற இலக்கிய வழக்கு கிழத்தி (கிழவி)
எனினும் அருகிய நூற்பாவில் (இறையனார் களவியல்) கிழவோள்
(தொல்.பொருள்) (கிழவள்) என்ற உருக்காணக் கிடத்தலின் ஒருவன்
என்பதற்கு ஒருவள் என்னும் பெண்பாற்சொல் இருந்தழிந்திருத்தல் வேண்டும்
என நம்பலாம். மற்று ஒருவனுக்கு (இஃதொ(ரு)த்தன் கலி) ஒருத்தன்
பெருவழக்கின்றாயினும் (திருவிளையாடல்-ஒருத்தன்) சிறு வழக்குளதுபோலும்
ஒருத்தி பெருவழக்காயும் ஒருவள் சிறுவழக்காயும் இருந்ததுபோலும். 
ஒலிநலம் இன்றென மறுத்தல் வருவள் போலும் வினைச் சொற்களில்
உளதாம் ஓசையே சாலும் எனச் சாம்பும்.

சிலசொல் இருநிலை

307. நூ: குறிலதன் கீழ்ஆக் குறுகலும் அதனோ
        டுகரம் ஏறலும் சிலசொற் குரிய.

    பொ: குறில் எழுத்தையடுத்து நிற்பதாம் நெடில் குறுகலும், அதனோடு
உகரம் ஏறி நிற்றலும் சில சொல்லுக்குரியன.

சா: நிலா --> நிலவு, விழா --> விழவு, பலா --> பலவு, சுறா --> சுறவு, இரா --> இரவு, புறா --> புறவு, அரா --> அரவு, கனா --> கனவு.

308. நூ: எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி
        எழுப்போ சையினால் திரிதல் பண்பே.

    பொ: எழுத்தொத்ததுபோல் - பொருள் வேறுபாடு தெரியும்
புணர்ச்சியுடைய சொல் எழுப்பிக் கூறும் ஓசையால் தன் பொருள் திரிந்து
காட்டுதற் பண்புடையது.

 

சா:

உலகம்+பல+விதம்:

 

உலகு+அம்பல+விதம்

 

இனியார் இனியார்

 

இனி+யார்; இனியார்

 

தாமரைக் கண்ணால்
கண்டனர்.

 

 

 

தாம்+அரைக்கண்ணால்

 

தா(வு)ம்+மரைக்கண்ணால்

 

யாரினும் காதலம்

 

யார்+இ(ன்)னும்

309. நூ: காரணம் முன்னும் ஆக்கம் பின்னும்
        சேர வருஞ்சொல் தவிரா தொன்றே,

    பொ: ஆக்கத்திற்குக் காரணத்தை முன்னும், காரணத்தால் பெற்ற
ஆக்கத்தைப் பின்னும்     பொருந்திவரும் சொல் இரண்டிலொன்றைத்
தவிராது.