என்று வந்தும் தனிச் சொல்லாய் விளங்கும். அல்லது என்பது
அஃறிணை ஒருமைப்பால் ஒழிந்து அவன்
அல்லது நீ, முருகன் அல்லது
அழகு எனப் பொதுவில் வருதலும் காண்க. அவனாவது அல்லது நீயாவது
என்பது
பிழை; ஒன்றே சாலும்.
312. நூ: பெயரெச்ச வினைப்பின் பிணைந்து வருங்கால்
ஆறெனும் சொல்லின் றுகரம் கெடலுமாம்.
பொ:
பெயரெச்ச வினையின் பின்னே ஆறு என்னும் சொல் ஒட்டி ஒரு
சொல்லாங்கால் றுகரம் கெட்டு நிற்றலுமாம்.
சா:
கண்டவாறு கூறினான் - வாயில் வந்தவாறு ஏசினான்.
என்னுமா(று)ப் போல - என்புழிக் கெட்டு வலிமிகுந்தது
காண்க.
வீழ்த்தியவா(று) வினையேன் நெடுங்காலமே. (தே)
ஈண்டு வீணாக்கியவாறு என்னே! என இரங்கற் குறிப்புத் தோன்ற
நிற்றல் அறிக. யாரினும் காதலம்
என்றேனா, தந்ததாக் கொண்டு
சொல்கிறேன் என ஆக என்பதன் ககரம் குறைந்து நிற்றற்கும் இதற்கும்
வேறுபாடுணர்க.
313. நூ: இறந்த காலப் பெயரெச் சத்தின்பின்
திரிபெய ராகிய கால்கடை வந்து
வலிமெய் மிகலும், ஒரு சொல்லாகி
வினையெச் சம்போல் தோன்றலும் ஆமே.
பொ:
இறந்த கால வாய்பாட்டுச் செய்த என்னும் பெயரெச்சத்தின் பின்
திரிபுப் பெயராகிய கால்,
கடை வந்து வல்லின மெய் மிகுதலும், அதனால்
ஒரு சொல்லாகி வினையெச்சப் பொருள்போல் தோன்றலும்
ஆகும்.
இவற்றை வினையெச்சம் என்று தொல்காப்பியம் கூறும். இல்லவள்
மாணாக் கடை; ஒலித்தக்கால்
என்னாம் உவரி; மாணாத விடத்து என்றும்,
ஒலித்தபொழுது என்றும் பொருள்படல் காண்க கால் - காலம்
என்பதன்
திரிபெயர்; கடை என்பது இடம் என்னும் பொருளது: துணிக்கடை;
சாய்க்கடை எனவருவன. இக்கால்
வழக்கில் உள்ளவந்தாக்க வாங்கிக்
கொளலாம் என்பதில் வந்தாக்க - வந்தக்கால் என்பதன் திரிபே.
இக்கடை என்னும் சொல்லே கடைக்கண், கடைக்கால் என்பனவற்றுள்
இறுதியைக் குறித்துப்பின் கடைசி
என வடிவெடுத்து நின்றது.
|