பொ:
ஊர்ப்பெயர்கள் சுருங்கி நின்று வழங்க மருவும்பொழுது பெரும்பாலும்
மூன்றாம், இரண்டாம் எழுத்தின்
மேல் ஐஏறப் பெறும்.
கோவன்புத்தூர் |
- |
கோவை; |
நாகப்பட்டினம் |
- |
நாகை |
தஞ்சாவூர் |
- |
தஞ்சை; |
மன்னார்குடி |
- |
மன்னை |
சிங்கப்பூர் |
- |
சிங்கை; |
புதுச்சேரி |
- |
புதுவை |
திருநெல்வேலி |
- |
நெல்லை; |
அதிவீரராமப்பட்டினம் |
- |
அதிரை |
பெரும்பாலும் இரண்டினும் மூன்றினும் வருவதுண்டேனும் சிறுபான்மை நான்கினும் மேலும் வரும்: |
குடமூக்கு |
- |
குடந்தை; |
அடியார்க்குமங்கலம் |
- |
அடியர்க்கை |
திருச்சி(ராப்பள்ளி) போல அரி சிதைவும், உறையூர் - உறந்தை
(அறந்துஞ் சுறந்தை) என விரி
சிதைவும் ஓரோர் வழிப்படுவன.
முகவை, மதுரை இயல்பின் அமைந்தன.
அரண்டாங்கி+அறந்தாங்கி; ஆர்க்காடு+ஆற்காடு. போலும் பிழைவழக்குகள் பயனில.
சோணாடு, மலாடு பெருந்திரிபின.
புதூர், புத்தூர் என்பன இரு வேறூர் காட்டுதலும் உண்டு.
322. நூ: பல்வகை வழுவின் சொல்வகை பொருள்வகை
செல்வகை நோக்கி நல்வகை கொளுவுக.
பொ:
பல்வகை வழுக்களான் அமையும் சொல்வகை பொருள்
வகைகளின் நடையறிந்து நல்லனவற்றைக்கொள்க என்பது.
அ. |
இடம் பிறழல் |
: |
வசை-வை (வைததனால் ஆகும் வசை)
மை-மசை கசப்பு-கைப்பு (கல்யாணம்-கண்ணாலம்). (தடி)
--> தசை-சதை; வாவல்-வவ்வால் நாவற்பழம் - நவ்வாப்பழம் (பிழை). |
ஆ. |
இடை நழுவல் |
: |
கருப்பஞ்சாறூரனார் - கஞ்சாறனார்
ஒழுக்கங்கெட்ட - ஒழுக்(கங்)கட்(ை)ட
போகட்டான் - போட்டான்.
(குசேலர் காதை) போக + அட்டான்-போகட்டுக்கொண்டான்
மாதோ - போட்டான
நெருப்புப்பெட்டி - நெருப்(புப்)பெட்டி
கருப்புக்கட்டி - கருப்பட்டி. |
|