|
|
|
துருக்கர்-துலுக்கர் (தில்லி துருக்கர் செய்த வழக்கமடி); பெருத்தஎலி-பெருச்சா(ளி)லி.கண்ணாம்பொத்தி (காணாப்பூச்சி). நன்பகல் என்னும் பண்டை இலக்கிய வழக்கு இன்று, நண்பகல் என்று நடுப்பகலைக் குறித்தலும் திரிதலே. (புரிமணை-பிரிமணை). |
ஏ. |
பல்திரிபு |
: |
எகனை மொகனை - எதுகை மோனை. னை இடம் பிறழலும்,
எல்லை-எல்கை என்றாதல்
நல்லொலி என்றெண்ணும் கவ்வொலி
தவ்வொடு பொருதலும் நெடில் இருகுறில்- இயைபும் புகுந்து பல்திரிபடைந்தது காண்க.
கேள்விக்கூண்டு - கிளிக்கூண்டு.
நெருநல்-நென்னல்; நெருநற்று-நேற்று. தென்+ஐ-தென்னை; தென்கு-தெங்கு+காய் தேங்காய்;
சொள்ளை-சொட்டை-சொத்தை. |
ஐ. |
பொருள் முரண் |
: |
மடவர் என்பது முட்டாளைக் குறிக்கத்தகவாயினும் மடவார் எனப்பெண்டிரைக்
குறித்தலான் மடையர் என்பது சமையலர் பொருள் வழக்கற்றமையின் ம(¬)டயர் எனக் குறித்தலும், பழமை தொன்மையும், பழைமை-கிழமை நட்பும், வரன்முறை மாறியதும்
பொருள் மாற்றம். |
நம்பு (நம்பும் மேவும் நசையாகும்மே) என்ற விருப்பப்பொருட்சொல்
தெளிவை (தேறான் தெளிவும்)
நம்பிக்கை எனக்குறித்தூன்றியதும், இனி -
(இனி நினைந்து இரக்கம் ஆகின்று) இப்பொழுது என்னும்
பொருளினின்று
‘இனிமேல்’ என்னும் பொருள் தருவதும் வழக்குமாற்றம்.
நக்கல் (நக்குதல் - நகல்), அட்டூழியம் (போர்த்தொழில்) குப்பை
(குவியல் - நெற்குப்பை)
தண்டம் (படை) தெக்கணாமுட்டி (தட்சணாமூர்த்தி)
கருமகாண்டம் (மறைநூற் செயற்பிரிவு) அட்டகாசம்
(விரட்டானச் சிவச்செயல்)
மயிர் (என்கடை மயிர்தான் - குணங்குடிதாசன்) இற்றை இழிபொருளுறலும்;
களிப்பு, மகிழ்ச்சி கள்வழிப்படா இன்பத்தைக் குறித்து உயர்பொருள்
உறலும்.
சொலிய (அழிய) என்பதிக்கால் அம்மிபொலிதல் (பொல்லாப்
பிள்ளையார்) என
அருகுபொருளுறுதலும்.
கற்பு (தொல் - சொல் - கற்றல்) இக்கால் பண்பாட்டளவையாய்ப்
பெருகுபொருளுறுதலும்.
|