பக்கம் எண் :
 
வணங

வணங்குதல்

-

வணக்கம்;

நல்

-

நலம்;

திரும்

-

திரும்பு;

பொருந்

-

பொருந்து

   

என்னும் ஒற்றைவழக்காற்று திரிபுப்பொருளும், என்பு - எலும்பு;
மறதி - மறவி என்னும் சொற்றிரிபும், செம்மாப்பு, மையாத்தல், சோகாப்பர்
என்னும் ஒருசொல் நீர்மை இருசொற்பொருளும், அரவணைத்தல்,
நச்சரிப்பு, உட்கார்தல் என்னும் இரட்டைச்சொற் பொருளும் நன்கொடை;
நல்லடக்கம், பணிவன்பு, பொதுவுடைமை (திரு. வி. க.) போலும்
புதுப்புணர்சொற்பொருளும்.


நீர்

-

நீத்தம்;

வார்

-

வாக்குதல்;

  சேர் - சேக்கை;  சார் - சாத்துபடி.

எனத் திரிவலியியல்பும்,

  தியாகம் - ஈகம் (ஈகை) பாட்டில் - போத்தல்
 யோகம் - ஓகம் டீ - தே(நீர்)

என்னும் புதுவகைச் சொல்லாக்கமும்,

    கால்நடை, பேர்வழி என்னும் சுற்றுப்பொருட்சுட்டும்.

    பகர்ந்தான் - பகன்றான் என்னும் இருவேறு உரைக்குறிப்புச்
சொற்களைக் கூட்டிப் பகன்றான் என்றும், மேன்மேல் என்பதை மென்மேல்
என்றும் மாற்றும் குழப்படிச் சொற்களைத் தவிர்த்து - பதின்மூன்று
வகையையும் இங்கிடனாக அமைத்துக்கொள்க.

போலி

323. நூ: அஃறிணைப் பெயரில் சிற்சில இறுதி
        மகரம் னகரமாய், லகரம் ரகரமாய்
        மாறி வருவதைப் போலி என்பர்.

    பொ: அஃறிணைப் பெயர்களில் சிலவற்றின் இறுதியில் நிற்கும்
மவ்வொற்று னகரமாயும், லகரம் ரகரமாயும் பொருள் மாற்றமின்றி எழுத்து
மாறிவரும்; அதனைப் போலி என்பர்.

ம்-ன்:

    நிலம் - நிலன்; முகம் - முகன்; அகம் - அகன்; இடம் - இடன்; வலம்
- வலன்; கடம் - கடன்; பயம் - பயன்; சமம் - சமன்; புலம் - புலன்; நலம்
- நலன்; கலம் - கலன்; புலம் - புலன்; (மரம் - மரன்).

ல்-ர்:

    சாம்பல் - சாம்பர்; (பிடிசாம்பராய் - பட்டினத்தார்) பந்தல் - பந்தர்;
சுவல் - சுவர்; குடல் - குடர்; திடல் - திடர்.