326. நூ: சொன்முதற் குறிலடுத்(து) இயையா ரழமெய்.
பொ:
சொல்லின் முதலில் குறில் நிற்க அதை அடுத்து ர, ழ
மெய்களாய் வந்தியை யாவாம்.
உயிர் மெயாய் நிற்கும் என்க.
கருமை, வழமை, பிறவுமன்ன.
‘அருவும் ஆருவும்’ எனத் தொல்காப்பியம் நூற்றது இதனாலன்றோ.
‘சுர்ரென்’ குறிப்பொலியில்
மாறி வருவது, உடன் நில்லா மெய்நிற்றல்
பிழையும் உள்ளதால் சுரீர் என்றும், விர் என்பதை
‘விரென’ என்றும் கூறல்
வேண்டும். சருச்சில், பெருநாட்சா எனப் பிறமொழிப் பெயராக்கத்திற்கும்
இவ்விதி செல்லும்.
327. நூ: சிலசொல் இறுதிர றுகரமோ(டு) உறழும்.
பொ:
சில சொற்களின் இறுதியில் ரகரமெய் றுகர இறுதியாய்த் திரிந்து
உறழும்.
தாறு(தாற்றுக்கோல்) - தார் (க்குச்சி).
ஒளிர் - ஒளிறு (ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி). உளர் - உளறு; கிளர் (கின்றான்) - கிளறு
(கின்றான்).
விளக்கும் வார் |
- |
விளக்குமார் |
|
அலம் |
+ |
வரல். |
விளக்குமார் |
- |
விளக்குமாறு |
அலமரல் |
- |
அலமலப்பு. |
இத்திரிபில் வார் என்பதே மெய்ச் சொல்லாதலை (வார் கோல்,
கூட்டுமார்) என்னும் இக்கால்
வழக்காலும் அறிக. இதனை றுகர ஈறாகவே
கருதுவதைச் செருப்பு எனத் தொடக்கி விளக்குமாறு என முடித்த
காளமேகப்
பாட்டாலும், விளக்குமாற்றான் விளக்கப்படும் என்ற பரிதிமாற்கலைஞர்
(றகரம் இரட்டித்த)
சதுரப்பாட்டுரையாலும் தெளிக.
சுவல்+சுவர் (போலி)=சுவறு எனத் [ (சுவல்+து = சுவறு தவல்+து = தவறு
‘தவலருந் தொல் கேள்வி’ (நாலடி)
] திரிந்ததெனக் கொளின் சுவர்ப்
பொருள் விளங்கும். இதனான் சுவற்றில் என்றெழுதல் பிழையின்றாம்.
ரம்மெய் என்னாமையால் - நிரை (கூட்டம்) நிறை (நிறுத்தல்) இரண்டும்
தம்முள் நிரைய, நிறைய
எனக் கலந்து நடப்பதையும், புரந்தருதல் என்பது
‘குடிபுறங்காத்தோம்பி’ போலும் தொடர்களான்
புறந்தருதல் என்ற
பிழைச்சொல் வழக்கும், பொருத்தவரை என்பது - பொறுத்தவரை எனப்
பிழைபட நிற்றலும்
கொள்க.
|