328. நூ: இருகுறில் முன்வரும் சொல்முதல் உயிர்நீண்(டு)
ஒருநெடி லாகவும் உருவுறல் உண்டே.
பொ:
சில சொற்களில் சொல் முதலாக வரும் இருகுறில்களுள்
முதலெழுத்துயிர் நீண்டு ஒரு நெடிலாக உருப்பெறுவதும்
உண்டு
சா:
துகள்-தூள், முகவாய்-மோவாய். பிதற்றல்-(பிதத்தல்) பேத்தல்;
பொழுது-போது, (பகுத்தல்)
பகல்+பால் (ஐம்பால்) அகல்-ஆல் (ஆல்போல்
தழைத்து), அகழ்-ஆழ் (ஆழி) தொகுப்பு தோப்பு.
பெயரன்+பேரன்,
பெயர்த்தி+பேர்த்தி, பெயர்+பேர், அகத்துக்கு+ஆத்துக்கு (பார்ப்பன வழக்கு)
இவை போல்வன கொள்க. உனக்கு-(னே) நோக்கு; எனக்கு-(னே)நேக்கு -
இவை பிழை
(பகுத்து) பாத்தூண் மரீஇயவனை, எனப் பெயராயும், ‘தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்’ என
வினையாயும் திரியும். வளை + அகம் = வளாகம். என இரு சொற்புணர்வில் நிற்றலும் அடங்கும்,
எனில்-ஏல் (செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று) எனினும்-ஏனும் (தேர்வாரேனும் பணி கிடைப்பதரிது)
எனின்-திரியாது. (ஏனும் - ஏயும் எனத் திரிதல் ஒருபால் வழக்கு -நகையேயும், கணமேயும்) என்னும்
இடைச்சொற்றிரிபுகளும்
இத்திறத்தன.
இதன் போலியாய் மோத்தல்-முக(ர்)தல் - (நல்)குரவு என எதிர்மாற்றி
உரைத்தல் பழம்பிழை
வழக்கு. இயல்-ஏல் என இம் முறையால்
மாறிற்றன்று. இவை வேறுபட்ட தன்மையன (இயற்கை) இயன்றதைக்கொடு
கொடுப்பதை ஏற்றுகொள் (ஏனம்). செய்தி-செயிதி-சேதி என்னும்
முரண்திரிபு ஒருசார். வீழ்து;
விழுது (போழ்து-பொழுது-போது) இவ்விதிக்கு
அடி-
‘குறுமையும் நெடுமையும் அளபிற்கோடலின்
தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத்தியல’
என்னும் முதனூல் நூற்பாவே.
முன்னெழுத்து நீளும் இப்பெரும்பால் போக்கன்றிச் சிறுபால்
குணவாளன் - குணாளன் (மணவாட்டி - மணாட்டி)
என இரண்டாம் எழுத்து
மிகலும், மாட்டுப்பெண்(ணா) நாட்டுப் பெண் என்றும் நிரம்ப - ரொம்ப -
நொம்ப என்னும் ஈரெழுத்தும் திரிதல் வழக்கும் உள. இவை பிழை.
329. நூ: இ உ வை எ ஒ வாய் ஒலித்தல் வழக்கு.
பொ:
‘இ’ யையும், உவ்வையும் ‘எ’ யாகவும் ஒ வ்வாகவும் ஒலிப்பது
வழக்குரிமை.
சா:
இலை - எலை, உரல் - ஒரல் என்பன கீழ்வழக்கு.
|