பக்கம் எண் :
 
New Page 1

    நுங்கு - நொங்கு.  இப்பொதுத் திரிபு வழக்கால் செம்மை வழக்கைப்
பிழைபடுத்தி செலவு - சிலவு; தொகை - துகை; தொடை - துடை;
கொத்துவிளக்கு - குத்துவிளக்கு; எனத் திருத்திக்கூறும் மனப்பான்மையால்
திரித்துக்கூறுதல் மக்களின் சட்டாம் பிள்ளைப் பாங்கு.

    தொளை (தொளை தொட்டார்க்கு என்னை கொல்) = துளை தளிர்-
துளிர் முனி-நுனி எனப் பழஞ்சொல் திரிந்தது மேலுணர்வே.  செம்பு -->
சொம்பு, புய்த்தல் --> பிய்த்தல் என எ, ஒ வாகவும், உ - இயாகவும்
தம்முள் மாறல் ஒன்றிரண்டு.

    இவைபோலும் அடிவழக்கன்றி ‘குடரோடு துடக்கிமுடக்கியிட’ என
இலக்கியத்துத் திரிபும் உண்டு.  தொடக்கம் என்பதினும் துவக்கம் என்பது
நன்றாதல் போல் தோன்றல் இவ்வுணர்வே.  காவிரி எனுஞ்சொல்
இடையிகரம் எகரமாய் மாறுங்காலே பால(£)டை முதல் நெடில் நோக்கி
முதலயல் நீண்டதுபோலும் நீண்டு காவேரி என நின்றது.  இத்திரிபிற்குக்
கவேரன் என்னும் தந்தை பெயர் படைப்புக் கதையே.

ஆனால்

330. நூ: ஆயி னோடால் சேர்ந்திட ‘யி’கரம்
        மாய நடக்கும் ஆனால் என்பது
        தொடர்ப்பொருள் மாற்றும் இணைப்பிடைச் சொல்லே.

    பொ: ஆயின் என்னும் உருவமுடன் அவ்வுருவின்மேல் ‘ஆல்’
சேர்ந்திட யிகரம் விலக அமைந்தியலும் ஆனால் என்னும் உருவமும் முன்
தொடரின் பொருளை மாற்றிப் பின் தொடரோடு இணைக்கும் பொருளுடைய
இடைச் சொல்லாகும்.

    (ஆய் என்பதனடி (313) ஆ+த்+இ=ஆதி; நளவெண்பா).

    ஆயின் என்னும் சொல், ‘ஆ’ என்பதன் முதனிலையில் சார்ந்துள்ள
இன் இடை நிலையோ, ஐந்தன் உருபோ அன்று.  மற்று இடைநிலைப்
பட்டுவருவது ஆயினான் என்பதே.  ஆ என்னும் வினையேறி வருதல்
உருபிற்கில்லை.  இது முற்கால்.-

        ‘வேற்றுநா டாகா; தமவேயாம்: ஆயினால்
        ஆற்றுணா வேண்டுவதில் (பழமொழி) எனவும்

    ‘பெண்-பொருளன்று; பொருளாயின் பூவே சாந்தே பாகே எண்ணையே
அணிகலனே என்றிவற்றாற் புனைய வேண்டா-தான் இயல்பாகவே
நன்றாயின்’ எனவும், (களவியலுரை) அவ்வாறாயின்