பக்கம் எண் :
 
என

    என்னும் வினையெச்சப் பொருளினே வழங்கியது.  பின்றை (செயின் -->
செய்தால்) மாயின்-மாய்ந்தால் (இன் - ஆல்) என்னும் வினையெச்சத்திரிபில்
ஆயின் என்பதன் இன் நீங்காது,

    ஆல்ஏறி தகரம் இடைப்பெறாமல் (எனின்- என்றால்) ஆயின் மேலே
ஆல்ஏறி முடிந்த சிறு வேறுபாட்டுச் சொல் இஃது.  ஆயினால் பின்,
போயினான் - போனான் போலும் இடைநழுவல் உற்றது.  இதனால் ஆயின்
என்பதே சாலும் என்க.

    ஆயின் என்பதன் தொடக்கப் பொருளாய-இணைப்புப் பொருள் மட்டில்
பயக்கும்.  ஆகையால், ஆதலால், ஆல்மட்டும் பெற்றும் ஆகலின்,
ஆதலின் என்றிவை இன்மட்டும் பெற்றும், ஆதலினால் (ஆகலினால்)
என்பது இரண்டும் பெற்றும் ஆகையினால் என்பது ஆகையின் என்ற
வழக்கின்மையால் இன்சாரியை மேலனபோல் ஆல் வினையெச்ச இறுதி
பெற்றும் இயன்றன.  இப்பொருட்டாய அதனால் என்பது சுட்டடியாகப்
பிறந்த பிறிதொரு சொல்லென்க.

சில தனிச்சொற் பொருள்

331. நூ: பச்சை எனுஞ்சொல் பசுமை அன்றியும்
        தற்கொள் சொல்லின் மிகுபண் புணர்த்தும்.

    பொ: பச்சை என்னுஞ்சொல் பசுமையைக் குறித்தல் அன்றியும்
தானடையாகுஞ் சொல்லின் பண்பினை மிகுதிப்படுத்தியும் உணர்த்தும்.

    பசுமையாவது ஈர்மை.  விரியுறு பச்சை (-தோல்.பொருந். 5).

    சா: பச்சைக்காய்கறி, பச்சரிசி (பச்சை அரிசி) பச்சடி (பச்சையாய்
அடுவது) பச்சை (இ)ரத்தம் பரிமாறிடுவோம், இச்சிச் சென்னும் பச்சை
முத்தங்கள் (பாவேந்தன்) என்பன பசுமை.  பச்சைத் தண்ணீர், பச்சைக்
குழந்தை என்பன தண், குழ இவற்றின் தன்மையை மிகுத்தன.  பச்சை என
வண்ணத்தைக் குறிப்பது-பயிர்ப்பசுமை பற்றிவந்த பெயர் என்க.  இதனை
வெளிர்ப்பச்சை, இலைப்பச்சை, கிளிப்பச்சை என்னும் வழக்கால் கண்டறிக.

332. நூ: எல்முதல் எலேயும், ஏடன் ஏடியின்
        திரிபாம் அடா, அடி என்பவும் இறுதி
        டாடி இறுநிலை யாகியும் இயங்கும்.

    பொ: எல் அடியாகப் பிறந்த எலே என்பதும், அவ்வடித் தோன்றிய
ஏடன், ஏடியின் திரிபாகிய அடா, அடி என்பனவும், இவற்றின் இறுதி
மட்டாய டா, டி என்பன இழியுரிமை வழக்கு இறுதிநிலை போலவும்
இயங்கும்.