சா :
‘எல்லே இலக்கம்’ (தொல்) என்பதுவோ பிறிதோ ஆகிய எல்
என்பதன் அடியாகப் பிறந்ததேயாதல்
எல்லே இளங்கிளியே (திருப்பாவை)
எல்-எல்லா (காண்பென் காண் எல்லா) (எலுவ குறுந்தொகை) எல,
ஏலே,
ஏல, ஏய் (வில்-விய்) வழக்கு.
ஏல-ஏட (புகற்றுதல்-புகட்டுதல்) ஏடன், ஏடி.
ஏ(ண்)டா, ஏ(ண்)டி-இன மிகுந்துவருவன.
சீச்சீ சிறியர் செய்கை செய்தான் (பாரதி) சீ என்பது சீழ் என்பதன்
குறையாதல் எதிர்வழக்காய்ப்
பிள்ளையர் மருத்துவமனையில் உளது என்று
கூறலால் கொள்க. சீ-சீய்த்தற் பொருள்படுவது வேறு. ஏ
ஏ (தமிழச்சியின்
கத்தி) ஏ ஏ இஃதொத்தன் (கலி) விளிப்படு திரிபு. ஏடு தூக்கி வந்த
பாங்கன்
நட்புப் பற்றி வந்ததெனல் ஏடிக்குப் பொருந்தாமை உணர்க.
அன்றி ஓவியன், கலைஞன் போன்றவற்றிற்குப்
பெண்பால் இன்மை-
பெண்ணடிமைக்குறியே என்பார் கூற்று - மாந்தன், நண்பன் போலும்
பொதுச்சொற்கட்கின்மை
நோக்கிப் பொய்யாய் நொற்வுற, புலவர், அறிஞர்
எனப் பலரீறே பண்டையின் விளக்கியமை
போலும், ஏடர் என்னும் வழக்குமின்மையின் விடுக்க.
ஏல-ஏட-அடே (தசை-சதை) அடேயப்பா: என்னும் வழக்கால் ஏட-அடா
திரிபின் இடைநடை அடே என்பதறிக.
அஃது இருபாற்கும் அட(£)க்
கடவுளே! அடியாத்தா! (அட(£)ப்பாவி; அடிப்பாவி) எனத்திரிந்து நிற்கும்.
இதன்பின் காரன், காரி பெயரீறு ஆதல் போலும், வாங்குடா; நில்லுடா;
கொண்டாடி; பாருடி என வினைப்பின்
ஆகும் தாழ்வழக்குற்றன. அப்பாடா,
அம்மாடி-மிகத்திரி வழக்கின.
333. நூ: இரண்டிலொன் றன்மையைக் குறிப்பது அன்மை
ஒன்றுமில் லாமையை உணர்த்தும் இன்மை.
பொ :
இரண்டு பொருளில் ஒன்று இன்றி மற்றதைக் குறிக்கும
அன்மைச்சொல்; ஒன்றுமே இல்லாதமையைச் இன்மைச்
சொல் உணர்த்தும்.
நு :
இருமறைச் சொற்களின் பொருள் வேறுபாட்டு நுணுக்கம்
கூறுகிறது.
பண்பள வாய்க் கூறிய இன்மை இன்று, இல்லை என்றும் வரும்.
அன்மையும் அவ்வாறே.
சா :
‘நினக்கு நல்லையும் அல்லை’,
‘நதியின் பிழையன்று.’
|