வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்; என்பனபா.
என்னிடம் இருப்பது ஐந்தன்று; இரண்டு. என்பது செம்மை: ஐந்தில்லை
இரண்டுண்டு என மாறி வருதல்
வழுவமைதியாகக் கொள்க. முன்னை
நூல்கட்குத் துணை செய்யும் இக்குறிப்பில் இரண்டு என்று பலவற்றைக்
குறிப்பதாயினும் அவ்வாறு கூறாதது தெளிந்துணர்த்துதற் பொருட்டு.
334. நூ: சும்மா எனுந்திரிபு இலவயம் வெறுமை
காலத் தடிக்கடி முதலிய பொருள்படும்.
பொ:
சும்மா என்னுந் திரிபுச்சொல், இலவயம், வெறுமை, காலப்
பொருளுடை அடிக்கடி முதலிய பொருள்படும்.
சா:
இவ்வளவுகுறைப்பதைவிடச் சும்மா வாங்கிக் கொள்ளுங்கள்
(இலவயம்). இப்பொருள் படுவதொரு
சொல் அமஞ்சி(க்கரை) என்பர்.
வெறுமை, பொருள் வெறுமை, தொழில் வெறுமை என இரண்டாயின.
பானை சும்மா இருக்கிறது. (பொ.
வெ.) சும்மாத்தான் இருக்கிறாள் எனக்
கருவுறாமையையும், சும்மா இருக்கிறார் என நலத்தையும்
குறிப்பிடும் முகவை
வழக்கும் பொருள் வெறுமையே.
சும்மாவே இருக்கிறான் எனப் பணியின்மையைக் குறிப்பது தொழில்
வெறுமை. இன்னும் சும்மாப்
பார்த்துவிட்டுப் போகலாம் என வந்தேன்
என்பதும் அதுவே. சும்மா வருகிறான், சும்மா
பேசுகிறான் என்பது
‘அடிக்கடி’ பொருள்படுதல் காண்க. ‘அமாவாசைச் சாப்பாடு சும்மா, சும்மா
கிடைக்குமா’
என அடுக்கி வந்தே விளக்குவதும் காண்க. அடிக்கடி என்பது
அடிக்கு அடி என இடப்பொருள் நெருக்கத்தைக்
குறிக்க எழுந்து, இன்று
காலச் செறிவைக் குறித்தலால் நூற்பாவில் காலத்தடிக்கடி என
விளக்கினாம்.
இஃது ஒன்றாலொன்றுரைத்தல்:- வினையால் வினையாக்கி கோடல்
குற்றமின்று.
ஒருசார் வழுவமைதி
335. நூ: முறைப்பெயர் பலவும் விளிப்படு திரிபில்
நிலைப்பெயர் ஆகிமேல் உருபும் ஏற்கும்.
பொ : முறைமை சுட்டும் பெயர் பலவும் விளிக்கப்படும் திரிபுருவே
நிலையுருவாய், இயல்புப் பெயர்போல்
உருபும் ஏற்கும். உம்மையால்
புலனாம்-பொதுவழக்கின் இவ்வியல்பில் திரிபெயர்களும்
வழக்குப்
பெயர்களே.
|