பக்கம் எண் :
 

    சா : அம்மை --> அம்மா; அப்பர் --> அப்பா;அண்ணன் >அண்ணா;
அக்கை --> அக்கா; மாமன் --> மாமா; அத்தன் --> அத்தான்;
தாதர்+தாத்தா; ஐயன்+ஐயா இவற்றொடு உருபேற்றிக் காண்க. ‘அப்பாவுக்கு
நான்கு; அம்மாவுக்கு மூன்று;’ ஆய்ச்சி போலும் திரிபும், தங்கை+தங்கச்சி
சிறுபால். அம்மாயி-அம்மாய்ச்சி, அப்பாயி; அப்பாத்தா, முதலிய அடுக்கு
வழக்கும் உள.  ஆத்தி-ஆத்தா-ஆய்ச்சி என்பதன் திரிபாதல் வேண்டும். ஆய்ச்சி-ஆயனின்பெண்பால்.  குழந்தை அவலங் கொள்ளுங்கால்
காப்புணர்ச்சிக்காக அம்மையை அழைத்தல் போலும் வழக்கே - ‘அம்ம
கேட்பிக்கும்’ (தொல்) என்றாதல் வேண்டும்.  அது போன்றே தந்தையைக்
கூப்பிடும் ஐயவோ-ஐயோ என்பது அவலத்திரிசொல் ஆதல் காண்க.
அம்மகோ-ஐயகோ ஒப்பிடுக.  அச்சோ, அந்தோ அகோ முறையே அச்சன்,
அத்தன், அக்கை இவற்றின் திரிபென்பர்.

    உங்க(ள்) ஆத்தா + (ங்)கோத்தா முதலிய திரிபு மிகை.  ‘கோச்சி வரும்’
என்ற இருப்பு வழி அறிவிப்போடு கொப்பரும் வருவார் என்று கல்லடி
வேலன் என்பான் எழுதியது இத்திரிபுணர்வே.

பிழை திருத்தம்

336. நூ: திருமணச் செய்தியில் நங்கையை, நம்பிக்குத்
        தருவதாய்க் கூறலே தமிழ்மர பாகும்.

    பொ : திருமணச் செய்தியுரையிலோ இதழிலோ இம்மணமகளை
இம்மணமகனுக்குக் கொடு வினை நிகழும் என்று கூறுவதே தமிழ் மரபாகும்.

    சா : கண்ணகியைக் கோவலனுக்கு மணமுடித்தார்.

    இதனான் செயப்படு பொருளாகப் பெண்டிர் கருதப்படுதல் நோக்கன்று.
 வாழ்க்கைத் துணையாக வகைப்படுத்தித் தனி மனையறம் படுத்தல்,
பொருளே நோக்கு.  மற்று ‘ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு’ என உம்மையிட்டுச் சொல்லாமல்
‘இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ என வலியுறுத்திக்
கூறினும் மணவிலக்கு என்னும் ஒத்துப்போகவிடாது நிலையின்மையை
உருவாக்கும் விதியை ஏற்றலாகாதென்னும் கருத்தினே தமிழ்மரபெனச் சொல்,
கருத்து இவற்றை வைத்துக் கூறினோம்.  கொடுத்தல், தருதல், ஈதல்
முறையே உயர்ந்தோன், ஒத்தோன், இழிந்தோன் உரையெனும் பண்டை
வழக்கு வீழ்ந்தது. ‘வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பது வீழ் வழக்கு.