பக்கம் எண் :
 
337

337. நூ: குழந்தைப் பிறப்பைக் குறிக்க, அம்மைபால்
        தந்தைக்குத் தோன்றிய தென்பதே தக்கது.

    பொ: குழந்தை பிறந்த செய்தியைக் குறிப்பதற்கு இத்தாயிடத்தில்
இத்தந்தைக்குத் தோன்றியது என்று கூறுவதே தக்கதாகும்.

    சா: கதிரவனுக்குக் குந்தியிடத்துத் தோன்றியவன் கன்னனாம்.

    இது உடலியல் முறையில் தமிழில் அமையும் அறிவியல் தொடரென்க.

    மற்று முன்னதும் இதுவும் இக்கால் ஈரிடத்தும் குவ்வுருபிட்டே
கூறப்பெறினும் குவ்வுருபு தன் பொருள் வலியிழந்தே வருதலின்
வழுவமைதியாகக் கொள்ளலாம்.

1. ஆதிக்கும் பகவனுக்கும் பிறந்தவர் திருவள்ளுவர் என்பது முழுப் பொய்.
2. கண்ண! யான் காற்றின் வேந்தர்க்(கு)
அஞ்சனை வயிற்றில் வந்தேன்-(கம்பராமாயணம்)

338. நூ: முகவரி முறைமையில் தமிழுக் கியைய
        ஊர்தெரு பெயரெனும் ஒழுங்கே நன்றாம்.

    பொ: முகவரி குறிக்கும் முறையில்-தமிழ்த் தொடர் அமைப்பிற்கேற்ப
ஊரை முன்னும் அடுத்துத் தெருவையும், பின்னர் பெயரையும் எழுதும்
வரிசை ஒழுங்கே தொடருக்கு நன்றாம்.

பெறல்: தமிழ்நாடு, | (தமிழ்நாட்டுத் தஞ்சை மாவட்டத்தின் திருவாரூரில் உள்ள நடவாகனத்தெருவில் அமைந்திருக்கும் இயற்றமிழ்ப் பயிற்றகம் பெறல்)-
  தஞ்சாவூர் மாவட்டம்,
  திருவாரூர்,
  நடவாகனத்தெரு,
  இயற்றமிழ்ப்பயிற்றகம்

    இக்கால் வழக்கில் உள்ள முறைமைக்கு மாறாக - தலைகீழாக இதனைக்
கூறியது குழப்புவதற்கன்று.  ஆங்கிலத் தொடர் அமைப்பிற்கியைய வழங்கும்
இக்காலப் பெயர், தெரு, ஊர் முறையினும், தமிழ்த்தொடர் மரபுமுறை
அஞ்சலகப்பணிக்கும் பிறவற்றிற்கும் எளிதாதல் காண்க.  பிற்கூறும்
இரண்டும் தமிழ்த்தொடர்