பக்கம் எண் :
 
New Page 1

    முறையை ஒட்டி நடைமுறைக்குக் கீழ்மேலாய் அமையினும்
வரல்வேண்டும் என்னும் கருத்தில் கூறுவன.  சப்பான் முதலிய பிற
மொழிகளில் இம்முறை வழக்குடைத்தாதல் காண்க.  இன்னும் மெய்ம்மைக்
குறிப்பு (Promissary Note) ஒற்றி முதலியவற்றில் இம்முறைப்படி எழுதப்படுதல்
காண்க.

339. நூ: நாட்குறிக் குங்கால் ஆண்டை முன்னும்
        திங்கள் அடுத்துப் பக்கலும் எழுதுக.

    பொ: நாளைக் குறித்தெழுதும் போது ஆண்டை முன்னும்
அடுத்துத்திங்களும், பக்கலும் முறையே பின்னும் எழுதல்வேண்டும்.

    சா: ‘திருவள்ளுவர்க்குப்பின் 2001ஆம் ஆண்டு, தைத் திங்களில் 1
ஆம் பக்கல் பொங்கல் விழா நிகழும்’ என்பதை தி. பி. 2001-1-1 பொங்கல் -
(திருவள்ளுவர் நாள்) நிகழும் எனக் குறிக்கலாம். இதனை ஆங்கிலத்
தொடரமைப்பில் 14th. January. 1970 A. D. will be held the Festival of Pongal
(1970-1-14)
இதனை முன்பின் கொண்டுணர்க.

340. நூ: முன்னெழுத்துக்குறி பெயர்முன் னுறல்தகும்.

    பொ: முன்னெழுத்தாக இடும் பெயர் சுருக்கக்குறி பெயர்க்கு முன்னிடுதல் தகும்.

    ஆங்கிலத் தொடரமைப்புப்படிப் பின்னிடுதலே வேண்டுமெனினும் முன்னிடுதலும் உண்டாகலின்மாறு தெரியாது.

    சா: த, பரதன்; சிவ. சுந்தரர்; சிறுத்தொண்டு.  சீராளன்.  ‘சி’ எனச்
சொல்வது போலும்-இகழ்வுக்குறிகட்காக இரண்டு முதலா எழுத்துகள் கூட்டி
முன்னிடலும் பெண்டிர் திருமணத்தின் முன் தந்தை பெயரும் பின் தம்
கணவர் பெயரும் முன்னிடலும் நம் நாட்டு வழக்கு.

    இம்முறைமை கொண்டு முகவரியில் வரும் W/o; S/o; போன்றவற்றைத்
தமிழ் முறையில் கணவன், தந்தை என்றே குறித்திடலாம்.  To, From
இவற்றிற்கு ஈடாக கு - இன் என இடாது பெறல், தரல் என்றே குறிக்கும்
தமிழ் வழக்கைக் காண்க.  C/o என்பதை மே/பா எனக்குறித்தல் குறியீட்டுமுறையில் அடங்கும்.  பிறவுமன்ன.

341. நூ: வழக்கில் உள்ள அனைத்துல கெண்கள்
        அரபியக் கொடையல: அருந்தமிழ் இருப்பே.