பக்கம் எண் :
 

    வி: முன்னோர் கூறிய உரிமைப் பொருத்தம் இயையு மாறின்மையின்
முன்னூல்களில் உரிச்சொல் எனக் கூறியவற்றுள் இற்றை வழக்கு நோக்கிச்
சில வைப்பாம்.

    உரிச்சொல் தன்மை இசை, பண்பு, குறிப்பு எனப் பிரித்தல் ஒன்றோடு
ஒன்றொவ்வாமையும், நனி - நன்னர் இரண்டற்கும் நல் - என்பதே
அடியாகலின் உரிச்சொல் - பிற சொற்கட்கு வேர் என்பது சாலாமையும் -
உண்மையான் அடையாய் மட்டில் வருதல் உரைத்தாம்.

    உரிச்சொல், வேர்ச்சொல் அமைவுடையது என்பது இயைவதன்று. 
‘வாழை’ என்னுஞ் சொல்லிற்குப் பாவாணர் ‘வழு’ (வழு) அடியாதல்
வேண்டுமென்பதொத்து ‘வாழ்’ (வாழையடி வாழையென) என்பதும் இயைதல் காண்க.

    மற்று, ‘விழா’ என்ற சொல்லிற்குக் கால்டுவெல், ‘விழி’ (கண்விழித்து மகிழ்தல்) என்பதையும் மு. வ. ‘வீழ்’ (விரும்புதல்) என்பதையும் அடியாகக் கூற, விழு (விழுப்பம்) என்பதையும் வைத்தற்கு இடனாதல் காண்க.  எனவே வேர்த்தன்மை உரியினின்று வேறுபட்டது உணர்க.

344.  நூ: ‘சால உறுதவ நனிகூர் கழிமிகல்.’

    பொ: இவை யாறும் மிகற் பொருட்டின.

சா: 1) ஆலயம் தொழுவது சாலவும் நன்று.-(ஒளவை)
  2) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்-(புறம்)
  3) காமமோ பெரிதே; உயிர்தவச் சிறிது-(நற்றிணை)
தவத்திரு அடிகளா சிரியர்.
  4) நனிபே தையே நயனில் கூற்றம்-(புறம்)
  5) அருள்கூர்ந்து வருக; அன்புகூர்ந்த நண்ப;
  6) கழிபெருங்காரிகை, கழிநல் குரவே தலை;
கழிய நன்றாயினும்.           (குறள்)

    வி: இவ்வாறு அடையாய் வந்தன தனிச்சொல்லாயும் இயங்கும்.
மிகுபொருள் கொட்டி வைக்கும் பெரும்பானையைச் ‘சால்’ என்றும், மிகுந்த
அன்பினராவர் எனும் பொருளில் ‘உறவு’ என்றும் (பற்றற்ற கண்ணும் பழமை
பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணேயுள) மிகுநோன் பேற்றல் என்னும்
பொருளில் தவம் என்றும், ‘அருள் கூர்ந்து தருக’ என மிகுதிப் பொருளில்
கூர்மை என்றும் மிக நீர்ப்பாய்ப்போம் எச்சத்தைக் ‘கழிச்சல்’ என்றும்
கூறுவன அத்தகையன. பிறவுமன்ன.