பக்கம் எண் :
 

    சா: திருக்குறளன்; தமிழ்மொழியன்; மொழியர்; மொழியேம்; மொழியீர்.

    (பையன் என்பதற்குப் பசியன் என்பதற்கு வேறாகப் பையையுடையவன்
என்று நயங்கூறல் இதுபற்றியே).

    இடம்: மானக்கஞ்சாறனார்; மலையன், (மலையமான் பெயர்).

    காலம்: உத்திராடத்தான், ஆதிரையான் (முத்).

    சினை: மொட்டைத்தலைச்சி, ஆறுவிரலன்.

    பண்பு: கரிது, செவ்விது (குறள்) பெரிது, சிறிது, வறிது, உரித்து.  பரியது
(கூர்ங்கோட்டதாயினும் - குறள்).

    தொழில்: கடுநடையின, உண்ணி.

    சா: உயர்ந்த கேள்வியன் (மாங்குடிமருதன்) அன்று அலது (அல்லது)
அலன் (அலள், அலர்) அல்ல; அல்லன; இன்று இலது; இல்லது.  இலன்
(இலள்) இலர், இல, இல்லன உண்டு; உள; உள்ள உள்ளது; உளன் (உளள்)
உளர்; வலது; (வல்லது) வற்று (வடுக்காணவற்றாகும் கீழ்) (குறள்) வல்லன்
(வல்லாள்) வல்லார்; அற்று; இற்று; (அன்னது; இன்னது) ஒப்பது;
கண்டனையர் (போல்வது - தெரிநிலை வினையே) (எற்றென்றிரங்குவ-
குறள்) எற்று - (ஒளவை).

    வகையறிவான் கட்டே உலகு (கண்ணது).

    குண்டு கட்டு (ஆழ் கண்ணது) என்பது சினையடியாயது.

    ஏழன் வேற்றுமை பொருள் குறித்தலின் அதனில் விளங்காத வேண்டி
கண் என் இடைச்சொல்லைத் தனித்துரைத்தாம். இது போன்றே உடைத்தும்
மேலமையும், உடைத்து பண்படிப் பிறந்ததாய்க் கருதவேண்டுவது காண்க.

352. நூ: அவைமுறை யாகப் பெயரெனப் படலாம்;
        பெயர்ப்பின் வருமெனின் பெயர்ப்பய னிலையாம்.

    பொ: குறிப்பு வினைகள் என மேற்காட்டியவை முறையோடு
பெயரென்றே குறிக்கப்படலாம்.  இயல்புப் பெயர்க்குப் பின்னும் வருகிறதே
எனின் அவ்விடத்துப் பெயர்ப் பயனிலையாகும்.