பக்கம் எண் :
 

    சா: அவன் கைத்தொழில் வல்லான் - பெயரடுத்து வருவதை -
‘மொழிபல’ என்பது போலப் பெயர்ப்பின் வருவதாகக் கொளின் அமையும்
என்பது.

353. நூ: உறுமுக் காலம் காட்டும் எனினே,
        எதிர்மறை முற்றில்நாம் ஏற்றிவைத் துரைத்தல்போல்
        இதனினும் நம்முணர் வெதிரொளி காலமே.

    பொ: குறிப்புவினை உறுவதாய முக்காலத்தையும் காட்டுகிறதே என்றால்
- எதிர்மறை வினைமுற்று காலங்காட்டுவதாகக் கொண்டு நாமே முன்பின்
தொடர்ப் பொருளமைப்பில் காலமூட்டிக் காண்பதைப் போல இதிலும்
நம்முணர்வால் எதிரொளிப்பதே காலம் என்க.

    எடு: மாடுகள் நேற்று ஓடா; இன்று ஓடா; நாளை ஓடா என்னும்
எதிர்மறை முற்றுப்போல்,

    (முருகன்) நேற்றும் பொன்னன்.

    (முருகன்) இன்றும் பொன்னன்.

    (முருகன்) நாளையும் பொன்னன்.  என வருதல் காண்க.  இற்றை
வழக்கில் ஓடவில்லை என்றும், பொன்னனாயிருந்தான் என்றும் முக்கால
வினை சேர்த்தே சொல்லப்பட்டு வருதலானும் காலத்தின் இன்றியமையாமை
இல்லாதாகிறது.

354. நூ: உயர்திணை முடிபுகள் பெயராய் அமையினும்
        அஃறிணை இறுநிலை துறுஅ வினைக்கெனின்
        சுட்டும் வினாவும் துவ்வீ றுறுமே.

    பொ: ‘உயர்திணைச் சொற்கள் இருநிலையினும், பிறநிலையினும்
பெயராய் அமைந்தாலும், அஃறிணை இறுதி நிலையாய து, று, அ
வினைக்கன்றே இறுதியாய்வரும் எனின் - சுட்டும் வினாவும் துகரவீறு
பெற்றுப்பெயராகும்: அதனை நோக்குக’ என்பது.

    அது, இது, எது, யாது - போலும் சுட்டுப்பெயர் வினாப்பெயர் போலும்
அடக்கலாம்.

355.  நூ: ள ண முதனிலை மேல்து டுவ்வாம்.

    பொ: ள, ண இறுதி முதனிலையாகக் கொண்டு மேலணையும் துகரம்
டுகரமாம்.