பக்கம் எண் :
 
New Page 1

    கேண்மியா என்பதில் இறுதி மியா ‘குற்றியலிகரம்’ என்று முன்னூல்கள்
கூறினும், அஃது உண்மையில் கேளும் (யா) என்பதே.

    விளங்குதற்காக ஒரு சொல்லைக்கூறினும் சென்மியாவிலும் செல்லும்
என்பதே உண்மை உருவெனக் கொள்க.  சாலும் - சான்ம் (பரிபா).

    கேளும் என்னும் செய்யும் முற்று இடையுயிர் மறைந்து நிற்க ‘மேல்’ யா
அசை இயைந்த உருவே இது என்க. கேண்ம் + யா = கேண்மியா.  கேளும்
+ ஐயா + கேளுமையா = கேண்மியா என்று கூறுவது பிழை.

அளபெடை

362. நூ: விளி, இசை, நாட்டுப் பாடல்கள், செய்யுள்
        விலை,முறை யீடு,தாலாட் டொப்பாரி
        அழுகை என்றிங் குயிர்,மெய் ஒலிமிக்(கு)
        எழுகை அளபெடை; இரண்டைக் கடக்குமே.

    பொ: விளித்தல், இசை, நாட்டுப் பாட்டு, பழஞ்செய்யுள்
விற்பனைக்கூவல், முறையீடு, தாலாட்டு, ஒப்பாரிப்பாட்டு, விசித்தழுகை
இவற்றில் உயிரும் மெய்யும் ஒலிமிகுந்து எழுந்தொலிப்பது
அளபெடையாகும்.  அளபு (மாத்திரை) மெய்யும் ஆய்தமும் இரட்டிப்பாகவும்
நெடிலளபெடுக்கும்.  உயிர் இரண்டளபின் ஒவ்வொன்றும் கடந்தும் வரும்.

    இந்நூற்பா அளபெடை பயிலும் இடங்களான் அதனை நன்குணரப்
புலன் கூறியது.

    உயிரும் மெய்யும் எனாது உயிர்மெய் என்றது உயிர்நெடில்
இடையிறுதியில் உயிர்மெய்யுட்பட்டே அளபெடுக்கும் எனத் தெளிய.

    எண்ணெய்ய்.....(விலை) ; முருகா...அ...(விளி) பிறவருவழிக் காண்க.

363. நூ: நடைமுறை பா,வுரை கடைப் பிடிக்காமல்
        கடைமுறை யுறும்எடுப்(பு) ஆய்தம் மெய்யொடு
        அளபெடுத் தொலிக்கும் நெடிலுயிர் பின்னதன்
        குறிலிடல் குறியே ஐஒளவுக்(கு) இஉவே.

    பொ: நடைமுறையில் பாடலும், உரையும் கைக்கொள்ளாமல்
கழித்திருக்கும் அளபெடுப்பு, அளபெடுத்து ஒலிக்கும் ஆய்தத்