தொடு ஆய்தமும், மெய்யொடு மெய்யும் நெடிலுயிர்பின் அதன் குறிலும்
அளபெடைக் குறியாகும். அந்நெடில்
உயிர்களில் இனக்குறில் இல்லாத
ஐயுக்கு இய்யும், ஒளவுக்கு உகரமும் குறியாகும்.
நடையில் கடைப்பிடிக்காமல் என்றதனான் அளபெடையின்
இன்றியமைவு கூறப்பட்டது. எடுப்பு என்றது
(அளவு) எடை
எனத்தனிக்கூறின் நிறையைக் குறித்தல் விலக்கித் தெளித்தல்.
(அஇ) ஐ, (அஉ) ஒள இரண்டும் முன்னொலிக்கூறு பற்றி யாப்பில் ‘அ,
ஆ’ விற்கு இனமோனையாகக்
கூறப்படினும் ஈண்டு அளபெடுக்கும்
இறுதிக்கூறு பற்றி இகர உகரம் குறியாயின காண்க.
ங, ஞ, ண, ந, ம, ன, வ, ய, ல, ள எனப் பத்து மெய்களைப்
பழநூல்கள் வரையறைப்படுத்தும்.
இதனான் இனவலியன்றி மெலிமெய் இரட்டுறினும், வ, ய, ல, ள
உடன்நிலை மெய்மயக்கத்துப்
போலாது, தனித்திரண்டாய் நிற்பினும்
சொல்லிடை, இறுதியில் தனிக்குறிலுயிர் தன்னுருவொடு வரினும்
ஈராய்தம்
நிறைப்பினும் ஆண்டு அளபெடை உளதெனக் காண்பளவால் உணர்க.
364. நூ: குறில்நெடி லாகியும் அளபெடுத் தொலிக்கும்
அளபெடை நீட்சியைச் சார்பெனல் தகுமோ!
பொ: குறிலும் நெடிலாகமாறி அளபெடுத்தொலிக்கின்ற அளபெடை நீட்டத்தைச் சார்பென ஓரெழுத்து
வகையாக்கல் தகுமா.
நீங்கின் தெறூஉம்; கெடுப்பதூஉம்-(குறள்)
அளபெடுக்கத்தக்க நெடிலன்றிக்குறில் அளபெடுக்கிறது என
அடிப்படைக் குழறுபடியைச் சுட்டினும்
மேலுஞ்சில பொத்துறல் காண்க.
ஆஅதும் என்னுமவர் (குறள்) போல்வன சீர்பொருட்டு நீள்வதை
அசைநிறை என்று பிரிப்பின் மேலவற்றை
என்னென்பது, முன்னது
செய்யுளிசையாகவும் பின்னது இன்னிசையாகவும் அமைந்திருத்தல் காண்க.-ஒரு தன்மைத்தாம்
சான்றில் அன்றித்தழுவி, தழீஇ என்றும், (கலி. 146)
விழுமம் உறீஇ (உற்று) என்றும் கொளீஇய
(நல். 42) கொண்ட கொளுவிய
கழீஇ - கழித்து (அக. 38) அளைஇ - அளைந்து கெழுமிய - கெழீஇய (பு
24) என்றும் திரிபுற்றுவரும் இகர இறுதி வினையெச்சங்களை வடிவிலன்றிப்
பண்பில் அளபெடையெனல்
தகுமோ. ‘வரல் நசைஇ இன்னும் உளேன்’ -
என நசை (விருப்பு) என்னும் பெயர் (விரும்பி) நசைஇ
என வினையெச்சமாய்
மாறுவதைச் சொல்லிசையளபெடை என்பர். இஃது அணரி, சிவண்+இ
சிவணி என்பனபோல
‘வினையெஞ்சிகரக் கிளவியே’ ஆகும்.
|