பக்கம் எண் :
 
ஐக

ஐகாரக் குறுக்கம்

365. நூ: சொல்மூன் றிடத்தும் வருங்கால் குறிலாய்ச்
        செல்லும் ஐக்குறள் போலியுள் அடங்கும்.

    பொ: சொல்லின் மூன்றிடத்தும் வரும் ஐ அவ்வாறு வருங்கால்
குறிலாய்க் குன்றியொலிக்கும் ஐகாரக் குறுக்கம் போலியுள் அடங்கிவிடும்.

    ஐம்பது - அம்பது; சடையன் - சடயன்; மடை - மட; ‘கடக்கிப் போய்
வட வாங்கி வா’.

    தன்னைத் தனித்துக் குறிக்கும் போதின்றிப் பிறவிடத்தெல்லாம்
குறைந்துவிடும் எனின் ஐயின் இயல்பே இதுவன்றோ?  அதன் உண்மையாய
1 அளபை - (அய், அவ்) இரண்டென்று கூறிப்பின் 1 எனக்கூறிக்
குழப்புதல் வேண்டாவே.  (அன்னய் என ஒன்றரை ஒலியியல்பின் எதிர்
மாற்றமாய் அன்றோ எண்ணெய் - என்பதனை எண்ணைனத்திருத்துவதாய்
நினைப்பர் மக்கள்).

ஒளகாரக் குறுக்கம்

366. நூ: கௌவௌ எனும் ஒள கவ்வவ் ஆகும்.

    பொ: மொழியிறுதியாய் நிற்கும் ஒளவிறுதி ககரவகரம் கவ், வவ் என்று
எழுதத்தகும்.

    இஃது தனியெழுத்தாய் நிற்றலின் இறுதியாய் வருதல் குன்றாதெனினும்
முன்னிற்பது குன்றும் என்று கூறுவர்.  இடையில் ஒள வாராமை தமிழியல்பு.

    முன்வரும் - கொவை, தௌவை, நௌவி, பௌவம், மௌவல் - என
ஐந்தும் குன்றிவருமென முற்றுங்கூறலின் குறுகாமை எனத்
தனியில்லாமையின் ஒளகாரக்குறுக்கம் எனல் பொருந்துமாறின்மை உணர்க. 
ஒளவையாரை அவ்வையார் என எழுதல் இவ்வியல்பே.

    வி: முதனிலைகளைத் தொகுத்துரைத்த நன்னூல் ஒள, ‘ககர வகர
மோடாகும் என்ப’ என்றும் பின்னும் (137) அவ் என வகர இறுதியும் கூறிக்
குழப்புவதும் இதனால் என்க.  என்னை?  கட்டளை வடிவாய் வரவேண்டிய
வகர இறுதிக்குத் தெவ் எனும் ஒன்று ஒவ்வாமையின்.  இதனான் பிற்கூறும்
சீர்திருத்த எழுத்து வடிவம் வேண்டுவதும் தூண்டுவதும் வெறும்
விழைவன்று; வருவினையே என்றறிக.