பக்கம் எண் :
 
மகரக

மகரக்குறுக்கம்

 

367. நூ: மகரம் குறுக வம்முன் வருதலும்
        ளல ணனவாய்த் திரிதலும் புணர்ச்சி.

    பொ: வம்முன் வந்தும் ஒரு சொல்லிடையே ளல இரண்டும் முறையே
ண, ன வாய்த் திரிந்தும் மகரம் குறுகுதல் புணர்ச்சி வகையைச் சார்ந்ததே.

    கேளும், போலும் என்பது கேண்ம், போன்ம் என நிற்குங்கால் மகரம்
குறுகும் என நூல்கள் கூறும். இவை மருளும் - மருள்ம் போலும் - போல்ம்
என்றாதல் செய்யும் என் வாய்பாட்டு இடையுயிர் நழுவலும்; கேள்ம் -
கேண்ம் என மாறுதல் அருண்மகள் கன்மழை - போல் மகரப் புணர்ச்சியும்
ஆகி நிற்றலும் காண்க.  ‘கட்சியுட்காரிகலுழ்ம்’ என்றவிடத்துக் குன்றாமை
இருதிரிபில் ஒன்று நிகழ்ந்தானது போலும்.  எனவே இப்பல்திரிபைக்
குறுக்கம் என்றல் பொருந்துமாறு என்னோ?

    இரண்டும் இதழ்படு எழுத்தாகலின் மகரமுன் வகரம் குறுகுதல் பொதுப்
புணர்ச்சியும் அடங்கும்.

ஆய்தக்குறுக்கம்

368.  நூ: ஆய்தம் குறுகுதல் ஆய்ந்திடின் இல்லை
        ஆகலின் உயிர்மெய் ஆய்தம் சார் பிரண்டே.

    பொ: ஆய்தம் குறுகிவருதல் ஆராய்ந்து பார்த்தால் இல்லை. 
ஆதலால் உயிர்மெய் ஆய்தம் இரண்டே சார்பெழுத்தாகும்.

    ல, ள - வொடு தவ்வந்து புணரிடத்துத் தோன்றும் ஆய்தம் குறுகியது
என்று நன்னூல்கூறும்.  ஆயின் அது மகரக் குறுக்கம் போன்றே
புணர்ச்சியுள் அடங்கும் அப்புணர்விலும் ஆய்தம் குறையாமை
செவியுற்றுணர்க. அன்றி அப்புணர்வு வழக்கற்றமையும், அரை அளவின்

அரையாதல் மகரத்திற்கும், ஆய்தத்திற்கும் ஆகாமையும் அறிக.  சார்பு
இரண்டே என வரையறுத்தது தன் கோள் நிறுவல்.

ஒலிபெயர்ப்பு

369. நூ: தாய்மொழிக் கொப்பொலி எழுத்தைத் தவிர
        அயலொலிப்படும்பிற மொழிப்பெயர் எழுத்தைத்
        தமதாக் குங்கடப் பாட்டால் தமிழில்