மிகவாக் கலந்த வடமொழி ஆங்கிலம்
புகுவாய் நோக்கிச் சிற்சில புகல்வேன்.
பொ: தாய்மொழிக்கு ஒத்த ஒலியுடைய அயன்மொழி எழுத்துகளைத்
தவிர அயன்மைப் பண்பமைந்து சிறப்பொலியுடைய
பிறமொழிப் பெயர்களின்
எழுத்துகளைத் தம்மொலிப் படுத்துக் கொளல் வேண்டும் என்னும்
மொழியுடையார் கடமையால் தமிழில் மிகுதியாகக் கலந்துள்ள வடமொழி
ஆங்கிலம் என்பனவற்றின்
சிறப்பொலிச் சொற்கள் புகுந்துள்ளதைக்
கண்ணோடிச் சில செய்கைகள் கூறுவேன்.
வி: ஒவ்வொரு மொழிக்கும் பொதுக் கடப்பாடென்பதற்குத்
தாய்மொழிக்கு என்றும், ஒப்பொலி
எழுத்து உலகமொழிகள் அனைத்திற்கும்
பெரும்பான்மை எனற்கு - ஒப்பொலி எழுத்தைத் தவிர என்றும்,
நாட்டின்
முதல் கரு உரி இவற்றான் ஒலி வேறுபடுதல் இயல்பாதலை
அயலொலிப்படும் பிறமொழி என்றும்,
உயர்திணை அஃறிணைப்பெயரே
பெரிதும் மாறி வருதல் கூடும்; அல்லன இது போல் ஒலி பெயர்த்தலன்றி
மொழிபெயர்த்தற்குரியன எனப் ‘பெயர் எழுத்தை’ என்றும்
வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே(தொல்)
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்
என முதனூலாசிரியர் பணித்தவாற்றையும், தஞ்சாவூர், தூத்துக்குடி,
கொள்ளிடம், குமரிமுனை, இஞ்சி,
மாங்காய் இவற்றைத் தம்மொலிக்குத்தகவே
ஆங்கிலேயர் திரித்ததும் குறிக்க தமதாக்குங் கடப்பாட்டால்
என்றும்,
மிகவாக் கலந்த வடமொழி ஆங்கிலத்தை நோக்கிக்கூறினும், சிறுபால்
பெருவழக்குப் பிறமொழிச்
சொற்களும் நோக்கப்படும் என்றும் சொல்லின்
நிழலுணர்ந்து பொருள் கொள்க.
சா: சந்தனாபிடேகம் என்பதுபோல் பாலாபிடேகம் எனப்
பிழையுணர்வும் பிரமாதம் (பேரச்சம்)
மிக்கருமை, அவசரம் (சூழ்நிலை)
விரைவு எனப்பிழைப்பொருளும், திரேகம் (தேகம்), (பவளம்) பிரவாளம்,
செல்வந்தர் (தன்வந்தர் - செல்வர்) எனப் பிழைச்சொல்லுருவும் இறால்
(இறாற்று - இராட்டு)
ராட்டு போலும் முன்னாகா ஒலி முன்னாதலும் -
ஆயிரத்தாண்டுக் கலப்பாரியத்தால் வந்தது போலும்
நூற்றாண்டு
ஆங்கிலத்தால் பங்கெடுத்துக் கொண்டார், கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்,
போன்ற
தொடரமைப்புப் பிழைகளும், முற்பொதுவியலில் காட்டியவாறு
முகவரி, நாள், இடமாற்றமும்
|