சொற்பிழைகளும் குவிந்து நிற்றலின் தம்மொழிப்படுத்தலின்
இன்றியமையாமையை உணர்க. பெருநாட்சா,
உருத்திரசர்மன் - சன்மன்
(நந்திவர்மன் - வன்மன்) எனக்குறிலடுத்து நில்லாமையும், கம்சன்
(சிலம்பு)
மெலிமுன் திரிபும் பற்றித் திரிந்ததும், கர்ணன் (கருணன்) கன்னன்;
கிருஷ்ணன் -
கிருட்டினன் கண்ணன் எனப் பிறிதாய்த் திரிந்ததும் காண்க.
தமிழ் - வண்ணம் - வர்ணம் என வடமொழியாய் வன்னம் (கைவல்)
எனத் திரும்புதல் போலித்திரிபென்றுணர்க.
370. நூ: ஜவை யசவால் ஷவை சடவால்
ஸவை சசுவால் ஹவை அகவால்
க்ஷவை க்க, ட்ச இவற்றால் மாற்றுக.
நு: வடமொழியிற் சிறப்பொலி யாக்கங் கூறுகிறது.
ஜவை யவ்வாலும் சவ்வாலும், ஷவை சவ்வாலும், டவ்வாலும் ஸ வை
சவ்வாலும், சுவ்வாலும், ஹவை அவ்வாலும்
கவ்வாலும் க்ஷ என்னும்
கூட்டெழுத்தை க்க-என்பதாலும், ட்ச என்பதாலும் மாற்றுக.
சா: பங்கஜம் - பங்கயம்; அஜ - அயன்; ஜானகி - சானகி அஜந்தா - அயந்தா.
ஷகிலா - சகீலை; உஷா - உசை; துஷ்யந்தன் - துசியந்தன்; ரிஷி - இருடி; புஷ்கலா - புட்கலை; கனிஷ்கர்
- கனிட்கர்.
வாஸனை - வாசனை; ஸரஸ்வதி - சரசுவதி; சிரஸ் - சிரசு ஸந்தேகம் - சந்தேகம்; ஸந்தோஷம் -
சந்தோசம், சந்தோடம்; ஹவாய் - அவாய்
(த்திட்டு) ஹனுமான் - அனுமன்; ஹக்கிம் - அக்கிம்;
மோஹம் - மோகம்;
அஹம்காரம் - அகங்காரம்; தஷணன் - தக்கணன் (சிலம்பு) மீனாக்ஷி -
மீனாட்சி;
தட்சிணாமூர்த்தி - பக்ஷணம் - பக்கணம் (கு. கா.) தெக்கணமும்
அதிற் சிறந்த திரவிட நற்றிருநாடும்
இவற்றுள் ஜ ஒலியை ஈடுசெய்ய செயச்சந்திரன், செயலக்குமி,
செபமாலை, எனச்செகரம் வருவதும்,
ஜார், ஜார்ஜு - போன்றவற்றை சியார்,
சியார்சு என வேறு சொற்சாராது பெயர்த்தலும் அடக்குக.
ஸவுக்கு ச ஈடாக,
ஸ் - க்கு - சுவை ஈடாக்கி, மாசுகோ, ஆசுகார் பரிசு, சுகாட்டு, சிடாலின்
என
வல்லொற்று மிகுக்காது ஒலி நிரப்பிக்கொள்வதமையும்.
வேங்கடமஹீ ம(கி)யீ என்றும், மகேசுவரன், மயேச்சுரன் என யகரம் வருதல் சில.
|