மற்று க்ஷ வுக்கு ‘ட்ச’ வை வழிநூல் விதித்திலதேனும் இடைநிலை
மெய்ம்மயக்கம் பொருந்தலானும்,
வழக்கெளிமை நோக்கியும் நிறுத்தினாம்.
ஸ்மசானம்-மயானம் என வேறு ய-வின் திரிபு பெருவழக்கின்மையின்
விடுத்தாம்.
இவை வட வெழுத்தன்மையின் இங்கிருந்த எழுத்துகளைத் தமிழில்
அங்கனே கொள்ளலாகாதோ எனின்
வடவெழுத்தன்றாயினும்
இவ்விடைத்தரகெழுத்து (கிரந்த) வழிப் புகுவது ஒலியாகலினன்றோ விலக்கல்
வேண்டுவது. நன்னூலாசிரியர் மொழியாக்கம் கூறுமிடத்து
வடவெழுத்தெண்களைச் சுட்டிவிடுத்தது காண்க.
ஆயின் வருங்காலத்து
இம்முறை மீள் திறனாய்வுக்குரியதே.
371. நூ: ரம்முன் அஇஉ ஏற்ப மூன்றும்
லம்முன் இஉவும் யம்முன் இய்யும்
மொழிமுத லாகித் தமிழொலி காக்கும்.
பொ: ரகரத்திற்கு முன் அ, இ, உ ஒலிக்கேற்ப மூன்றிலொன்றும்,
லம்முன் இ, உ இரண்டிலொன்றும்,
யம்முன் இய்யும் மொழி
முதலாகாதவற்றிற்கா மொழி முதலாகித் தமிழின் ஒலியைக் காக்கும்.
சா: ரம்பம்-அரம்பம்; ரம்யம்-அரமியம். நோபல் பரிசு பெற்ற இந்தியர்
இரவீந்திரநாத தாகூரும்,
சி. வே. இராமனும் இறந்தனர். உரோமம்-உரோமானியர், உருசியா; இசுலாம், இலெனின்-இலங்கை;
உலோகம்,
உலோபி, உலோமாக்கள்; இயமன், இயக்கன், இயமானனுமாய் (சி. சி.)
(எசமானன் என்பது
வேறுபட்ட வழக்குத்திரிபு).
372. நூ: ஹய வரிமுன் வரின்மெய் கெடுமே.
பொ: ஹ, ய இரண்டன் உயிர் மெய் வரிசை 18 சொல் முன்னாய்வரின்
மெய் கெட்டு உயிர் எஞ்சும்.
சா: ஹரப்பா-அரப்பா; ஹிம்சை-இம்சை; ஹீனம்-ஈனம் (பிறவி) ஊனம்.
ஹென்றி-என்றி ஹேமாங்கதம்-ஏமாங்கதம்
(சீ-சி) ஹோமர்-ஓமர்
முதலியவற்றைக் காண்க.
அகரமும் இதில் அடங்குமேனும் முற்கூற்று பற்றியும் பெரும்பால்
பற்றியும் தனித்தனி கூறினாம்.
யமுனை-அமுனை (கு. தொ.) யசோதை-
அசோதை (திருப்பாவை) யுகம்-உகம் (க. ப.) யூகம்-ஊகம்; யோசனை-ஓசனை(த்தொலைவு).
ஜெருசலம்-எருசலம் என
|