பக்கம் எண் :
 
ஜகரவர

    ஜகரவரி மெய்கெடலும் ஜெமினி-யாமினி(த்தேவர்) ஜேக்கப்-யாகூப்பு
என ஜெ-யாவாக மாறுதலும் ஒருவாற்றான் அடக்குக.  ஜ இயைபு
பற்றியன்றே யாழ்ப்பாணத்தை ஆங்கிலேயர் Jaffne என்பது. Jesus-யேசு
என்பது-யே சொல் முதலாகாமையின் ஏசு-எசுபர்சன் என்றலே செம்மை. 
இவ்வாறே Vote-வோட்டு (ஒப்போலை) என்பது பிழையாய் ஓட்டு
என்றுரைத்தலே சரியாதல் கொள்க. Hearing-ஈரங்கி: Head (Constable) ஏட்டு
என மக்கள் திரிபு வழக்கு இஃதொட்டியதே.

373. நூ: செந்தமிழ் ஒத்தொலி சிறுமா றெழுத்துசொல்
        வந்திடின் ஆங்கிலம் வடமொழி வழுவும்.

    பொ: செவ்விய ஒலிபடைத்த தமிழ்மொழிக்கு ஒத்த ஒலியின் சிறிது
மாறுபட்ட ஒலிவாய்ந்த எழுத்தும் சொல்லும் ஆங்கிலம், வடமொழியில்
வந்திடுமேல் வழுவித் தமிழுக்கியைய அமையும்.

    வி: D-T-4 (த) ; B-P-ப.  K(g) க; ட, த, ப, க-நான்கினம் மேலவற்றுள
 அடங்கும்.  இவை இன எழுத்தான் அமைக்கப்படுவன.  பாவம் என்பது
கரிசு, அளிது எனும் பொருளன்றி விறல் என்பதைக் குறிக்கும் நான்கன்
கனைப்பொலிக்குத் தடிப்பெழுத்தில் சிலர் இடுவது கையெழுத்திற்கு
ஒவ்வாதொழியும். R, L, Y (U) போன்றவற்றிற்கு ர, ல, ய நூற்பா பொருந்தும். J-(G; du) ஜ; Sha-ti-ஷ;  S-ஸ H-ஹ இவ்விரு மொழிச் சிறப்பொலிக்கு
மேற்கூறிய நூற்பாக்கள் இயையும்.  மற்று எஞ்சி நிற்பன Z(Ph) F என்னும்
ஈராங்கில ஒலியும் அ: என்னும் சமற்கிருத ஒலியுமே.

374. நூ: ஆய்தம் பிறமொழி சிறப்பொலி பெயர்ப்பே.

    பொ: ஆய்தம் மேற்கூறிய பிறமொழிகளின் சிறப்பொலியைப் பெயர்க்கத்
துணையாம்.

    சா: ‘பஜமுன் ஆய்தம் FZ ஆகும்; கமுன் ஆய்தம் உருது கொள்
ககரமாம்’ (இ.த.இ) இந்நூற்பா ஜவை ஏற்கிறது. பஜார், Africa ஆப்பிரிக்கா
ஆய்தம் பெறாதே வருவன; கஃபா. திரு. கா. அப்பாதுரையார், பிரெஞ்சு -
என்பதை ஃவிரெஞ்சு என எழுதக்கூறுவர். ஃசீபுரா - Zebra எனலாம். மற்று
சார்பெழுத்துவரன் முறை கடந்து ஆய்தம் முன்வருதல் புதுவது புகுவது
என்க.

    அ: ஃ சொல்லிடைப்பட்டு நில்லாமையின் காட்டிலம் பர:+பர:=பரஸ்பரம்: ராம: - இராமன்.