375. நூ: மெய்முதல் வருதல் தமிழில் இலைமெய்.
பொ: மெய்யெழுத்து முதலாய் வருதல் தமிழ் மொழியில் மெய்யாய்இல்லை.
விரி: ‘உயிர்மெய் அல்லன மொழி முதலாகா’ (தொல்) என முதனூல்
கூறியது அயன்மொழி வரவுத் தணிக்கைக்கு
இன்றியமையாமையின்
மேலாய்தம் போல் தடுமாற்றம் ஆகாமையின் ஈங்குரைக்கப்பட்டது.
எடு: பிரசன்னம்; மருத்து; வியாதி; கிளைவு; தியூப்பிளே;
இம்முறையானன்றோ ஸ்வாமி - ஸ்யாமா
என்பன முன் மெய் அழிந்து திரிந்து
(சுவாமி) சாமி, சாமா எனத் திரிந்ததும்
Xaviar
- க்சேவியர்
சேவியர்
(சவேரியார்) என்றும் ஒலிக்கின்றன.
376. நூ: அஆமுன் அஆ வந்து ஆ ஆதலும்
இஈமுன் இஈவந்துஈ ஆதலும்
அஆமுன் இஈ(ஐ) வந்துஏ ஆதலும்
அஆமுன் உஊ(ஒள) வந்துஓ ஆதலும்
அஆமுன் எஏ வந்துஐ ஆதலும்
அஆமுன் ஒஓ வந்துஒள ஆதலும்
தமிழுயிர் எழுத்துகள் தோன்றிய முறையில்
இருசொல் இடைப்புணர்பாகும் இதனை
முறையே தீர்க்கம், குணம் விருத்தம்மென
வடமொழியாளர் வழக்குக் கூறுவர்.
பொ: கூறிய ஆறுமுறையில் புணர்தல் - தமிழில் உயிர் எழுத்துகள்
தோன்றிய முறையே - இரு
சொற்புணர்ச்சியின் இடை வந்ததாகும். இதனை
இவ்விரண்டாக நிரலே தீர்க்க சந்தி, குணசந்தி,
விருத்தசந்தி என
வடமொழியாளர் வழக்குக்கூறுவர்.
சா: |
அ1/2 |
+ |
இ1/2 |
= |
எ |
; |
அ1/2 |
+ |
உ1/2 |
= |
ஒ |
|
அ |
+ |
இ |
= |
ஐ |
; |
அ |
+ |
உ |
= |
ஒள |
|
அ1 |
+ |
2ஆ |
; |
இ1 |
- |
2ஈ |
: |
உ1 |
- |
2ஊ இவை நெடில். |
இஃது தமிழெழுத்து தோற்றமுறை. இம்முறையே வைப்பு முறையினும்
அமைந்துளது. முதலுயிர் மூன்று
முற்றோன்றியதைப் பாவாணரின் முதல்தாய்
மொழியிலும், வளர்ச்சித் திரிபுகளைச் சிவஞான முனிவர்
முதற்பாயிர சூத்திர
விருத்தியிலும் காண்க.
377. நூ: டம்முதற் சொற்கள் தம்முதல் ஆகும்.
பொ:
பிறமொழியில் ‘ட’ முதலாய சொற்கள் தமிழிற் புகுங்கால் தம்முதல் ஆகும்.
|