சா: டார்வின் - தார்வின்; டால்ஸ்டாய் - தால்சுதாய்; டார் - தார்;
டென்சிங் - தென்சிங்கு;
டென்மார்க் - தென்மார்க்கு; டேனியல் - தேனியல்.
முதல் எனத் தெளிவிற்கும் பெரும்பான்மைக்கும் கூறினும் பிறஇடை
கடைத்திரிபு வகையெல்லாம்
கொள்க அவை:
அ. |
பீட்டர் - பேதுரு; இட்டாலி - இத்தாலி; பிளாட்டோ - பிளாத்தோ; மீட்டர் - மீத்தர். |
ஆ. |
மாடல் - மாதிரி; ஆஸ்பிடல் - ஆசுபத்திரி;
(AP) Postle
- பாதிரி. |
இ. |
இங்லாண்டு - இங்கிலாந்து; வாலண்டினா - வாலந்தினா. |
ஈ. |
அலெக்சாண்டர் - அலெச்சாந்தர்; அண்டோனி - அந்தோனி. இருடகரம் இயைந்து வருதல் இடைநிலை
மெய்ந்நிலைக்கு ஒப்பினும் பிறமொழி ஒலிபுகலின் ஒழித்தாம். நட்டம் - வட்டம் போலும் தமிழ்
ஒலிபெறின் ஏற்கலாம். |
உ. |
ஆடம்ஸ்மித் - ஆதம்சுமித்து; டேவிட் - தேவித்து; விக்டர் - வித்தர். (தாவீது). |
ஊ. |
சாக்ரடீஸ் - (சோக்ரதார் என்பதினும் இயல்பு நன்றே) சாக்கிரதீசு - கிளியோபாட்ரா -
கிளியோபாத்திரா(பாற்றா) எதிர்மாற்றாயும் சில அமையும். தீவர்த்தி - தீவட்டி; பிரதிமா -
பாட்டிமா (மை); தக்கணாமூட்டி; பிரதிவாதம் - பிடிவாதம். |
378. நூ: தனிவல் லினமெய் இடைகடை வருங்கால்
மெய்யிரட் டித்துமேல் உகரமும் பெறுமே
பொ: தனித்து வல்லின மெய் தமிழில் நிற்றல் இன்மையால், அயன்
மொழிவழி அஃதொப்பவரின்
அவ்வல்லினமெய், இரட்டித்தலும் சிலவிடத்து
மேல் உகரம் பெறுதலும் ஆகும்.
சா: பக்வம் - பக்குவம்; யோக்யன் - யோக்கியன்; பாத்ரம் - பாத்திரம்;
போப் - போப்பு
+ ஐயர் = போப்பையர்; பஞ்சாப் - பஞ்சாப்பு; நியுயார்க் -
நியுயார்க்கு. இஃதொத்துத் திரிந்துவருவன
பல்வகை. குத்புதீன் - குதுபுதீன்;
பத்மா - பதுமை.
அ. |
சிங் - சிங்கு; பீகிங் - பீகிங்கு; வாசிங்டன்-(வாசிங்(கு)டன்) வாசிண்டன்; ஹாங்காங்
- ஆ(கா)ங்காங்கு. |
|