ஆ. |
கஸ்தூரி - கத்தூரி; அஸ்தினாபுரம்
- அத்தினாபுரம்; ஆஸ்திரேலியா - ஆத்திரேலியா; பாகிஸ்தான் - பாக்கித்தான். |
இ. |
மாக்சிம்கார்க்கி - மாக்கிம்கார்க்கி; சரத்சந்திரர் - சரச்சந்திரர். |
ஈ. |
அக்பர் - அகுவர்; எஜிப்டு - எகித்து; சேக்ஸ்பியர் - சேக்குவியர்; சேக்குபியர் என்றும்
விட்டொலியாயும், செகப்பிரியர் எனப் பிறழ்பொருளாயும் எழுதுதல் பிழையே.
|
379. நூ: பிறமொழி லவ்வொலி தமிழில் ளவ்வாம்
ஆவிறு சொற்கள் ஐயீ றாகும்.
பொ: வடமொழியில் உள்ள ஒரே லகர வொலிச் சொற்கள்
தமிழ்ப்படுங்கால், ளகர வொலியாகக்
கருதப்பட்டுள்ளன. ஆகார இறுதிச்
சொற்கள் ஐகார இறுதியாக்கப்பெறும்.
சா: தீபாவலி - தீபாவளி; கவலி - கவளி (கவடி); நாமாவலி-நாமாவளி;
மாலவிகா - மாளவிகை
(கா.ம); மாலிகா - மாளிகை; தலம் - தளம்.
இம்முறையில்
Cycle
- சைக்கிள் (மிதிவண்டி); பைபிள்;
Apple-ஆப்பிள்
எனப்படுதல் காண்க.
வள்ளி - வல்லி எதிர்ப்போக்கு.
சிவா - சிவை; உமா - உமை; உஷா - உசை; ஆஷா - ஆசை. கமலா
- கமலை (ஞானப்பிரகாசர்) விசயா
- விசயை (சீ. சி.).
பன்மொழிக்குரியன கூறி வருங்கால் வடமொழிக்குரியதைக்
கூறியமையின் மேலுஞ்சில கொள்க.
அகரத்திற் காவும் இகரத்திற் கையும்
உகரத்திற் கௌவும் இருவிற்-ககல்வரிய
ஆருவும்; ஏயாம் இகரத்திற்கு-ஓவாகச்
சேருமுக ரத்தின் திறம்! (நேமிநாதம்)
அருகன் - ஆருகதன்: (பர்வதம் - பார்வதி) தாசரதி(இ)ராகவன்; சிவன
- சைவம் (விட்ணு - வைணவம்)
மைதிலி வைதேகி; புத்தன் - பௌத்தன்;
(புருஷம் - பௌருஷம்) ருத்ரம் ரௌத்திரம்: இருடி - ஆரிடம்.
என்றிவ் வண்ணம் அமையும் தத்திதப் பெயர்களும்,
நர + இந்திரன் = நரேந்திரன்: அமர + ஈசன் = அமரேசன்: குல +
உத்துங்கன் = குலோத்துங்கன்:
சூரிய + உதயம் = சூரியோதயம் என
முற்கூறிய உயிர் முறைப் புணர்ச்சி வருவனவும் உணர்க.
|