பக்கம் எண் :
 
உகர உய
உகர உயிர் மெய்   ஊகார உயிர்மெய்
கு டு மு ரு ழு ளு - (கு) கூ டூ மூ ரூ ழூ ளூ
ஞு ணு து நு லு று னு - ஞூ ணூ தூ நூ லூ றூ னூ
ஙு சு பு யு வு - ஙூ சூ பூ யூ வூ

    இம்மூன்று குறியீடுகளும் இயையப்பொருத்தி இயற்றியுள்ள
இவ்வுயிர்மெய் வடிவங்களே தமிழின் உருவமைப் பொழுங்கைக் காட்டும்.

43. நூ: அச்செழுத்திற்கும் தட்டச்சிற்கும்
       பச்சைச் சிறுவர் பயிற்சி யினுக்கும்
       இஈஉஊ வரிசை உயிர்மெய்
       எழுபத் திரண்டு குறிதனித் தெழுதலாம்.

    பொ: அச்செழுத்துக்கும், தட்டச்சிற்கும் உள்ள எழுத்துச்
சுமைக்குறைப்பிற்கும் பள்ளிச் சிறுவர் மொழிப்பயிற்சிக்கும்
மாறுபட்டுக்குழப்பம் இன்மைக்கு வாய்ப்பாக இ, ஈ, உ, ஊ என்னும் நான்கு
உயிர்ஏறும் உயிர்மெய் வரிசையிலுள்ள எழுபத்திரண்டு எழுத்துகளையும்
குறிகளைத்தனித்துப் பிரித்து முன்னும் பின்னும் எழுதல்நன்றாகும் என்பது.

    இவ்விருவகையில் ஒன்று கொளின் முப்பத்தாறு வடிவமாற்றம் குறையும்.

    இவ்வாறு முறையே கடைப்பிடிப்பின் முப்பத்தாறு வடிவ வேறுபாடு
தணிய எழுபத்திரண்டு சுமைவடிவொழிந்து இயல்பாம்.

    வி: உகர ஊகாரத்திற்குரிய முக்குறியீட்டில் நேர்க்கோட்டுக் குறி
தனிக்குறியாம் தன்மையின்மையின் (பு பூ) தவிர்த்துப் பிறவிரண்டில் ஒன்று
தேறலாம்.  அத்தேர்ச்சிவேண்டுவது பற்றிப் பொதுவில் கூறியுள்ளோம்;
ஒன்றை ஓர்க அறிஞர் உலகம்.

    மற்று கூ என்பது குவ்வை சுழித்துடூப்போல் எழுதும் பழைமைத்
திரிபும், ரு ரூ முதலியவை ‘ர’வ்விற்குரிய கீழ்க்கோடு பெறாத மைய, ர், ரி, ரீ
மூன்றும் கீழ்க்கோடு பெறாமை (ர, ரா, ரெ, ரே, ரை, ரொ, ரோ, ரௌ) எனப்
பிறவற்றை நோக்கின் மேல் புள்ளி, விசிறிச் (விலங்குச்) செய்கைகளால்
விடுபட்டது என்பதும் சிறுமாற்றங்களே.  ஆங்கிலத்தில் உள்ளாங்கு
அச்செழுத்து, கையெழுத்துஎன்னும் முறையில் இம்மாற்றத்தை
அச்செழுத்தாக்கி, கைத்திரிபால் அமைந்த பிழையமைப்பைக்
கையெழுத்தெனப் பிரித்துக் கூறி மென்மெல மாற்றலாம்.

    பச்சைச் சிறுவர்க்கு (49, 50) ஆகார, ஐகார ஒளகார வடிவங்களே
மிகக்குழப்புவதாகவும் இங்குக்கூறியது ளு, ளூ, லு லூப்போல் எழுதப்படும்
குழப்பம் ஈண்டும் உறுதல் உண்மையினும், முன்மூன்று நூற்பாவினும்
தனித்தனி அமைக்கலாமையினும் என்க.