2. சொல்லியல்
44. நூ: சொல்லெனப் படுவது உள்ளத் தெழுந்த
கருத்தைப் பிறர்க்குத் தெரிக்கும் மொழியாம்
முழுவுருவத்தின் வலு வெலும்பாகிடத்
தன்னை உணர்த்தும் எழுத்துகள் சேர்ந்து
நன்னர் பொருளை நவில் வதாமே.
பொ:
சொல் என்று குறிக்கப்படுவது உள்ளத்தில் எழும் கருத்துகளைப்
பிறர்க்கும் தெரிவிக்கும்
மொழியாகிய முழுவுருவத்தின் உடலமைவுடைய
வலிய எலும்புகள் ஆகும்படித்தன்னை மட்டுமே உணர்த்தக்
கூடிய
எழுத்துக்கள் இணைந்து பிறபொருளை நன்கு காட்டுவதாம். (அன்றியும்
கருத்தைப் புலப்படுத்தாது
மறைப்பதும் மொழியாம் என்பர். அதனைப்
பொய் குறளை, பயனில் சொல் என அறநூல் கூறும். கடுஞ்சொல்
கருத்தைக் கொடிதில் உணர்த்துவது.)
எழுத்தைச் சொல்வழி அறிமுகப் படுத்தியது போலச் சொல் மொழி
வழிக் காட்டப்படுகிறது.
‘தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருளைச்
சுட்டுதற்கண்ணே யாம் சொல்’ என்பது பழம்பா.
சா:
பொருள் உணர்த்துவதே சொல்லின் இலக்கணம் என்க. மளை
(மலை, மழை) எனப் பொருளிலாப்
புதுச்சொல்லும், (அலகு, அழகு) அளகு
(பெடை) எனப்பொருள் இழந்த பழஞ்சொல்லும் சொல்லாகா.
45. நூ: ஓரெழுத் தேபொருள் உணர்த்தினும் சொல்லாம்.
பொ:
எழுத்துகள் சேர்ந்து வரும் பெரும்பான்மை யன்றிச் சிறுபால்
ஓரெழுத்தே பொருளை உணர்த்துவதாயினும்
சொல்லேயாம்.
சா:
ஆ, ஈ, ஏ, ஐ, ஓ, கா, கூ, கை, கோ, (கௌ)மா, மூ, மை, மோ, நீ,
நை, நோ, தா, தூ, தீ, தே,
தை, பா, பீ, பூ, பை, போ, வா, வீ, வே, வை,
சா, சீ, (யா)
ஓரெழுத்து ஒரு சொல் என்னும் இவை நொ, து தவிர்த்து நெடில்
உருவங்களினே அமையும்.
‘உயிர்மவில் ஆறும் தபநவில் ஐந்தும்
கவச வில் நாலும் யவ்வில் ஒன்றும்’
என்னும் நன்னூல்.
|